தமிழக சட்டசபை 14-ம் தேதி கூடுகிறது!!

Last Updated : Jun 6, 2017, 10:35 AM IST
தமிழக சட்டசபை 14-ம் தேதி கூடுகிறது!! title=

தமிழக சட்டசபை வரும் 14-ம் தேதி கூடுகிறது. அதிமுக அணிகளில் ஏற்பட்டுள்ள பிளவு, நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதம் மிகுந்த காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பொறுப்பு சட்டசபை செயலாளர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசியல் சாசனத்தின் 174(1)ம் பிரிவின் கீழ், தமிழ்நாடு சட்டசபையின் கூட்டத்தை வரும் 14-ம் தேதியன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் கவர்னர் கூட்டியிருக்கிறார் என கூறப்படுள்ளது.

இந்த ஆண்டு தமிழக சட்ட சபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் ஜனவரி மாதம் 23-ம் தேதி  தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, மற்றும் பிப்ரவரி 1-ம் தேதிகளில் நடைபெற்றது.

அதன் பிறகு, மார்ச் 16-ம் தேதி சட்டசபை கூடியது. 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் மார்ச் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. பிறகு சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டசபையின் கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக மே 11-ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். 

தற்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவின் பேரில் வரும் 14-ம் தேதி தமிழக சட்டசபை  கூடுகிறது

Trending News