புதுவை: முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே மோதல் முற்றுகிறது

Last Updated : Apr 5, 2017, 04:37 PM IST
புதுவை: முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே மோதல் முற்றுகிறது title=

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் அங்குள்ள அரசியல் வாதிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நடைப்பெற்று வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநர் அதிக அதிகாரம் இருக்கிறது என்று கூறி  தங்களது அதிகாரங்களை பறிக்க முயல்வதாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் உட்பட சில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

துணைநிலை ஆளுநர் மற்றும் அரசியல் கட்சிகளின் மோதல் பிரச்சனையால் அரசு பணிகள் முடங்கின. பல்வேறு நலத்திட்ட பணிகளையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போதைய நிலைமை பற்றி ஆராய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரஸ் நேற்று கூட்டியது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க. தவிர, அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன.

இந்த கூட்டத்தில் கிரண்பேடியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக  டெல்லி சென்று குடியரசு தலைவர், பிரதமரிடம் முறையிடுவது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் கூறியதாவது:-

புதுச்சேரி அரசியல் கட்சியகளும், மக்கள் பிரதிநிதிகளும் நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். நல்ல பணி செய்வதும், மாற்றத்தை கொண்டு வர சிந்தனை செய்வதும் சுயநலவாதிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால்தான் என்னை மாற்ற வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என கூறி இருக்கிறார்.

 

 

Trending News