FD வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது SBI: முழு விவரம் உள்ளே

புதிய SBI FD விகிதங்கள் ஜனவரி 8 முதல் ரூ .2 கோடிக்கும் குறைவான அனைத்து சில்லறை எஃப்.டி.களுக்கும் பொருந்தும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2021, 02:38 PM IST
  • SBI FD விகிதங்கள் புதிய வைப்புத்தொகை மற்றும் புதுப்பிக்கப்பட்ட முதிர்வு வைப்புத்தொகைகளுக்கு பொருந்தும்.
  • மூத்த குடிமக்களுக்கான SBI FD-யில், 0.5 சதவீதம் கூடுதல் வட்டி.
  • எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்.டி திட்டத்தை 20 மார்ச் 2021 வரை நீட்டித்துள்ளது.
FD வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது SBI: முழு விவரம் உள்ளே title=

SBI FD Interest Rates: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மெச்யூரிடி டென்யூரில் தனது நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களில் திருத்தம் செய்துள்ளது. புதிய SBI FD விகிதங்கள் ஜனவரி 8 முதல் ரூ .2 கோடிக்கும் குறைவான அனைத்து சில்லறை எஃப்.டி.களுக்கும் பொருந்தும். மிகப்பெரிய இந்திய வணிக வங்கியான SBI, ஓராண்டு முதல் இரு ஆண்டுகளுக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைகளில் எஃப்.டி வருமானத்தை 10 bps அதிகரித்துள்ளது.

முன்மொழியப்பட்ட SBI FD விகிதங்கள் புதிய வைப்புத்தொகை மற்றும் புதுப்பிக்கப்பட்ட முதிர்வு வைப்புத்தொகைகளுக்கு பொருந்தும். அனைத்து தரப்பினருக்குமான சமீபத்திய SBI FD-ஐ ஆன்லைனில் sbi.co.in இல் சரிபார்க்கலாம்.

இப்போது, ​​ 7 நாட்கள் முதல் 45 நாட்களுக்கான SBI FD, 2.90 சதவீதம் வருமானத்தையும், 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான SBI FD 3.9 சதவீத வருமானத்தையும் தரும். 180 நாட்கள் முதல் 210 நாட்கள் மற்றும் 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான SBI FD-க்கு 4.40 சதவீத வட்டி விகிதங்கள் (Interest Rates) கிடைக்கும்.

1 ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு குறைவான காலம் உள்ள SBI FD-யின் வட்டி விகிதம் 4.8 சதவீதத்திற்கு பதிலாக 4.90 சதவீத வருமானத்தை வழங்கும்.

2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட SBI FD ஆண்டிற்கு 5.10 சதவீதமாக அதிகரிக்கும். 3 வருடங்கள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான கால அளவிற்கு SBI FD வீதம் 5.30 சதவீதமாகவும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவிற்கு 5.40 சதவீதமாகவும் வரவு இருக்கும்.

ALSO READ: வீடு வாங்குபவர்களுக்கு good news: 30 bps வரை வட்டி விகிதத்தை குறைத்தது SBI!!

பல்வேறு கால அளவுகளுக்கான SBI FD வட்டி விகிதத்தின் பட்டியல்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான - sbi.co.in இல் மூத்த குடிமக்களுக்கான (Senior Citizens) SBI FD-யில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 0.5 சதவீதம் கூடுதலாக கிடைக்கும் என்று அறிவித்தது. அதாவது, இந்த வகை முதலீட்டாளர்கள் FD மீதான வட்டி விகிதத்தை 3.4 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாகப் பெற வாய்ப்பு உள்ளது. எஸ்பிஐ ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்.டி திட்டத்தை 20 மார்ச் 2021 வரை நீட்டித்துள்ளது.

ALSO READ: வாடிக்கையாளர்களுக்கு SBI அளிக்கும் good news: வருகின்றன 3000 புதிய ATM-கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News