அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்!
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இத்தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை வென்றுள்ளார்.
The Pride of @Naomi_Osaka_ defeats Serena Williams 6-2, 6-4 to become the first Japanese player to win a Grand Slam singles title!#USOpen pic.twitter.com/sNilrZOaNU
— US Open Tennis (@usopen) September 8, 2018
நேற்று நடைப்பெற்ற இந்த இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
விறுவிறுப்பாக சென்ற இப்போட்டியில் செரினாவை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஒசாகா எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள செரினா வில்லியம்ஸ், ஒசாகாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.