தை அமாவாசை முன்னிட்டு சுருளி அருவிப் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் புனித நீராடி பிண்டம் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கானோ பக்தர்கள் குவிந்தனர்.
Thai Amavasai 2023: ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு பிறகு, சனீஸ்வரர் தனது சொந்த ராசியான கும்பத்திற்கு சஞ்சாரம் செய்த 4 நாட்களிலேயே வரும் அமாவசை சனிக்கிழமை நாளில் வருவது கூடுதல் சிறப்பு
இந்து தர்மம் வலியுறுத்தும் விஷயம் நீத்தார் வழிபாடு. இறந்தவர்களை நினைவு கூர்ந்து வழிபடுதல் என்பது நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையாகும்.அதில், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகியவை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது
அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்பணம் அளிப்பது காலம் காலமாக கடைபிடிக்கும் வழக்கம். அதுவும் ஆடி, புரட்டாசி, தை அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடி தர்பணம் கொடுப்பது ஐதீகம்.
இந்துக்கள் இறந்து போன தங்கள் முன்னோர்கள் நினைவாக அமாவாசை தினங்களில் நாடு முழுவதிலும் உள்ள ஆறுகள், அருவிகள், கடல்களில் புனித நீராடுவது வழக்கம். தை அமாவாசை தினமான இன்று புனித தலங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபடுவார்கள்.
இன்று கடைபிடிக்கப்படும் அமாவாசையானது உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என குறிப்பிடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.