மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்த்தன.
இன்று தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் மாலை கூடியது.
சட்டசபை சிறப்பு கூட்டத்தில் அவசர சட்டத்தின் சட்ட முன் வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ், ராஜசேகரன், ஆதி, அம்பலத்தரசு, மாணவ பிரதிநிதிகள் ஐந்து பேர், நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்ட முன்வடிவை முதல்- அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிய, சபாநாயகர் தனபால், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவாகியுள்ளது.
மதுரை அலங்காநல்லூரில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது.
பொதுமக்களை சமரசம் செய்ய இயலாத அதிருப்தியுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசன நடத்தினார்.
பின்னர், மதுரையில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை வந்த தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவசர சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்ட முன்வரைவு நாளை சட்டசபையில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இன்றைய கூட்டத்தில் சுற்றுலா, கதர் உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.
சட்டசபையில் இன்று திருப்பூர் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் (அ.தி.மு.க.) பேசும்போது, ஸ்டாலினின் “நமக்கு நாமே” பயணம் பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், “நமக்கு நாமே” பயணம் என்று கூக்குரல் போட்டவர்கள் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை என்றார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது தி.மு.க. துணை தலைவர் துரைமுருகன் எழுந்து, “அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நமக்கு நாமே பயணம் பற்றி பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்க கோரிக்கை விடுத்தார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.