காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை என முதல்வர் பழனிசாமி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. மொத்தம் 23 நாட்கள் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடர் காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று சட்டசபையில் திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டும் என்று கூறினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்ததும் எம்.எல்.ஏ சரவணன் வீடியோ விவகாரம் குறித்து விவாதிக்க திமுக வலியுறுத்தினார்கள். ஆனால் அவைத்தலைவர் தனபால் மறுத்துவிட்டார்.
சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து வெளியேறிய ஸ்டாலின் கூறியதாவது:-
பண பேர வீடியோ தொடர்பாக பேச இன்றும் சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். சபாநாயகர் கூறியபடி வீடியோ ஆதாரத்தை கொண்டு வந்தும் எங்களை பேச அனுமதிக்கவில்லை. எனவே சபாநாயகரின் செயலைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

தமிழக சட்ட பேரவை கூட்டதொடர் வரும் ஜுன் 14-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் இன்று அறிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று காலை நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏதிர்கட்சி தலைவர் முகஸ்டாலின், அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, திமுக எம்.எல்.ஏ துரைமுருகன், காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.