உ.பி.,யில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, பா.ஜ.,எம்.எல்.ஏ., குல்தீப் சிங் 16 அணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, உத்திரபிரதேச மாநிலம் முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டிற்கு முன்பு, இளம்பெண் ஒருவர், தன் குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கொள்ள முயன்றுள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்கையில்... பாஜக MLA குல்தீப் சிங் சென்கர் மற்றம் அவரது நண்பர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட MLA மீது வழக்கு தொடுக்க முற்பட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் பலரிடம் புகார் அளித்தப்போதிலும் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனையடுத்து முதல்வரிடம் தெரிவித்த போதிலும் தகுந்த நியாயம் கிடைக்கவில்லை.
இதனால் கோபமுற்ற இளம்பெண் "எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் இல்லையேல் தற்கொலை செய்துக்கொள்ளுவேன்" என தெரிவித்துள்ளார்.இந்த விவாகாரம் குறித்து குற்றம்சாட்டப்பட்ட MLA குல்தீப் சிங் தெரிவிக்கையில்... என்னை சுற்றி சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த சம்வத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என கூறியுள்ளார்.
இதையடுத்து, பாலியல் பலாத்கார புகார் கொடுத்த பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார்.
இந்த வழக்கினை சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வரும் நிலையில், எம்.எல்.ஏ., குல்தீப் சிங்குக்கு எதிராக, போலீசார் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. அலகாபாத் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் குல்தீப்பை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என ஐகோர்ட் கேள்வியெழுப்பியது.
Central Bureau of Investigation (CBI) continues interrogation of BJP MLA Kuldeep Sengar at CBI Zonal office in Lucknow; he is being questioned since past 15 hours #UnnaoRapeCase pic.twitter.com/jjUBRFKylu
— ANI UP (@ANINewsUP) April 13, 2018
இந்த நிலையில், எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார் ஏப்ரல் 12-ம் தேதி லக்னோவில் போலீசில் சரண் அடைய சென்றார். ஆனால் அவர் சரண் அடைய அனுமதிக்கப்படவில்லை. இந்த சர்ச்சைக்கு உரிய வழக்கில் திடீர் திருப்பமாக, விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி விட மாநில அரசு முடிவு எடுத்து உள்ளது. இந்நிலையில் லக்னோவில் குல்தீப்சிங் செங்கரை தடுப்புகாவலில் எடுத்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. செங்கருக்கு எதிராக மூன்று வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இதை தொடர்ந்து, உ.பி.,யில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, பா.ஜ.,எம்.எல்.ஏ., குல்தீப் சிங்கை சி.பி.ஐ 16 மணி நேரம் விசாரனைக்கு பின்னர் கைது செய்யபட்டுள்ளார்.