தமிழக அரசியலில் ஒதுக்கப்பட வேண்டிய கட்சி தி.மு.க. என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பழநியில் நடந்த 'என் மண், என் மக்கள்' யாத்திரையில் பேசிய அவர், தமிழகத்தில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் குடும்ப ஆட்சியின் கீழ் வந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.