Ration Card News, e-KYC Deadline: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் e-KYC செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இந்த e-KYC செயல்பாட்டை செய்திருக்க வேண்டும்.
Mera eKYC செயலி மூலம் ஒருவரின் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை எண் மற்றும் ஆதாரில் பதிவு செய்த மொபைல் ஆகியவற்றின் மூலம் இந்த செயல்பாட்டை செயலியில் நீங்கள் நிறைவு செய்ய வேண்டும். இதற்கு பல முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், வரும் டிச. 31ஆம் தேதிக்குள் இந்த செயல்பாட்டை நிறைவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
காலக்கெடு நீட்டிப்பு
இந்நிலையில், உத்தர பிரதேச அரசு அதன் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ரேஷன் அட்டைத்தாரர்கள் e-KYC செயல்பாட்டை மேற்கொள்ள காலக்கெடுவை நீட்டித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் இதனை கட்டாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ் எப்போது?
முன்னர் டிச.31ஆம் தேதியை கடைசி நாளாக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது மூன்று மாதங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உத்தர பிரதேசத்தின் ரேஷன் அட்டைத்தாரர்கள் 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அவர்கள் e-KYC செயல்பாட்டை சேர்த்துக்கொள்ளலாம். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலமும், ரேஷன் அட்டைகளுக்குச் சென்றும் மேற்கொள்ளலாம்.
e-KYC உடனே செய்யுங்க
உத்தர பிரதேசத்தில் இதுவரை பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் இன்னும் இந்த e-KYC செயல்பாட்டை மேற்கொள்ளவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு சென்றும் இந்த e-KYC செயல்பாட்டை நிறைவு செய்யலாம். அதற்கு நீங்கள் ரேஷன் அட்டையுடன், மொபைல் மற்றும் ஆதார் அட்டையையும் கொம்டு செல்லுங்கள். இதன்மூலம் நீங்கள் அரசின் நலத்திட்டங்களை எளிமையாக பெறலாம்.
மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், பாராபட்சமும் இன்றியும் அரசின் திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவே இந்த செயல்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. எனவே, ரேஷன் அட்டைத்தாரர்கள் அனைவரும் இந்த செயல்பாட்டை நிறைவு செய்யுங்கள். தமிழ்நாட்டில் இதற்கு கடைசி நாள் டிச. 31 ஆக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
Mera Ration 2.0 செயலி
இனி ரேஷன் கடைகளுக்குச் சென்று ரேஷன் பொருள்களை வாங்கும்போது நீங்கள் ரேஷன் அட்டையை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என அவசியம் இல்லை. உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், Mera Ration 2.0 செயலியை தரவிறக்கம் செய்து அதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மூலம் அதில் உங்களின் ரேஷன் அட்டையை இணைத்துக்கொள்ளலாம். அந்த செயலியில் உங்களின் ரேஷன் அட்டை வந்துவிடும். அதை காண்பித்தே நீங்கள் ரேஷன் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம்.
ரேஷன் அட்டையை தொலைத்துவிட்டாலோ, ரேஷன் அட்டை இயற்கை பேரிடர்களால் காணாமல் போய்விட்டாலோ Mera Ration 2.0 செயலியில் உள்ள ரேஷன் அட்டையை காண்பித்தே நீங்கள் அரசின் நலத்திட்ட உதவிகளால் பலன்பெறலாம்.
மேலும் படிக்க | தமிழக அரசு வழங்கும் ரூ. 1000 பொங்கல் பரிசு தொகை! இவர்களுக்கு கிடைக்காது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ