பிரபல சேட்டிங் செயலியான WhatsApp தற்போது குரூப் வீடியோ காலிங்க் வசதியுடன் வாடிக்கையாளர்களை கவர வந்துள்ளது!
தற்போது இந்த வீடியோ காலிங் வசதியினை நடைமுறை செய்வதற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தினை செய்வதற்காக பீட்டா வெர்சனில் வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 2.18.145+ மற்றும் iOS 2.18.52 இயங்குதளத்திற்கு தற்போது இந்த பீட்டா வெர்சன் வழங்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது.
PLEASE! Check if group calls are enabled for you (iOS / Android).
You need to be VERY lucky!How to check: do a normal call and check if there is a new button “Add participant”. https://t.co/FAyRkI9oc7
— WABetaInfo (@WABetaInfo) May 18, 2018
சமீப காலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு WhatsApp பல்வேறு அப்டேட்டுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது குரூப் காலிங் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக WhatsApp-ல் இருந்த நீக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை திரும்பப்பெறுவதற்கான வசதியினை நடைமுறை படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக குரூப் அட்மின்கள், குழுவில் இருக்கும் நபர்களின் அட்மின் பதவியினை நீக்க வழிவகுக்கும் வகையில் அப்டேட்டினை வழங்கியது. அதேவேலையில் குரூப் தகவல்கள் பக்கத்தில் இருக்கும் i குறியினை பயன்படுத்தி குறிப்பிட்ட குரூப்பில் இருக்கும் நபர்களை தனியாக தேடி, அவர்களுடன் சேட்டிங்க் செய்யும் வசதியினை அறிமுகம் செய்தது குறிப்பிட்டத்தக்கது.