உலகின் உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் கரோலின்ஸ்கா ஆய்வு மையம் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசினை வழங்குகிறது. இதில் 2016-ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானைச்சேர்ந்த யோஷிநாரி ஓஷூமிக்கு நடப்பு ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்களின் செல்கள் தம்மைத்தாமே அழித்துக்கொள்வது பற்றிய ஆய்வுக்காக யோஷிநாரி ஓஷூமிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல நாளை இயற்பியல் துறைக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் வேதியியல் துறைக்கான நோபல் பரிசும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் இலக்கியத்துறைக்கான நோபல் பரிசு அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும்.
BREAKING NEWS The 2016 #NobelPrize #Medicine awarded to Yoshinori Ohsumi @tokyotech_en ”for his discoveries of mechanisms for autophagy” pic.twitter.com/PDxWbSqoIX
— The Nobel Prize (@NobelPrize) October 3, 2016