அமெரிக்காவில் இந்திய பொறியாளரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பியூரின்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்க்கப்பட்டது. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 5, 2018, 09:10 AM IST
அமெரிக்காவில் இந்திய பொறியாளரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை title=

தாராபாத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவர் கன்சாஸ் பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றிற்கு சென்றிருந்த போது அங்கே வந்த 51 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென ஸ்ரீனிவாசை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று கத்தியதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திலேயே சீனிவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அலோக் என்ற மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் ஆடம் புரிண்டன் என்றும், அவர் கடற்படையில் பணிபுரிபவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் குற்றவாளி பியூரின்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்க்கப்பட்டது. 

இந்த தீர்ப்பு குறித்து சீனிவாஸின் மனைவி சுனயான டுமாலா கூறியதாவது. நீதிமன்ற தீர்ப்புக்கு நன்றி. என் கணவரின் படுகொலையில் இன்று தண்டனை வழங்கப்படுவதால், எனது கணவர் மீண்டும் உயிர் உடன் வரமாட்டார். ஆனால் இந்த தீர்ப்பு மூலம் நல்ல செய்தி சொல்லப்பட்டு இருக்கிறது. மாவட்ட அட்டார்னி அலுவலகத்திற்கும், ஒலத்த போலிஸ் நிலையத்துக்கும் நன்றி கூற விரும்புகிறேன். என்று அவர் கூறினார்.

Trending News