பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்....!

பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக தெஷ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் பதவியேற்றார்....! 

Last Updated : Aug 18, 2018, 11:11 AM IST
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்....!  title=

10.19 | 18-08-2018

பாகிஸ்தான் பிரதமராக தெஷ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் பதவியேற்றுக் கொண்டார். பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான்கான் இன்று பதவியேற்றார்....! 


பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் இன்று பதவியேற்கிறார்!

பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 116 இடங்களை பிடித்திருந்தது.

நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 61 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 40 இடங்களிலும், மற்றவை 50 இடங்களிலும் வெற்றிபெற்றன. இதனை தொடர்ந்து இம்ரான்கான் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க முயற்சித்து வந்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 176 வாக்குகள் பெற்று இம்ரான்கான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சி உறுப்பினர் 96 வாக்குகள் பெற்றார். இதனை தொடர்ந்து இம்ரான் இன்று பிரதமராக பதவியேற்கிறார்.

பதவியேற்பு விழாவில், இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது...! 

 

Trending News