ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் போடும் வெறியாட்டத்தினால், அங்கே பெரும் பதற்றம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் அவர் தொடர்ந்து பொது மக்கள் மீது வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தாலின்கள் ஆப்கான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஆப்கானிஸ்தானின் 4 வது பெரிய நகரமான மத்திய ஆசிய நாடுகளின் எல்லையான பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப்பில் (Mazar-e-Sharif) உள்ள இந்திய தூதரகத்திலிருந்து இந்தியா விரைவில் தனது இராஜீய அதிகாரிகளை தயாகம் அழைத்து வருகிறது.
மேலும், அங்குள்ள இந்திய குடிமக்களை, தாயகம் அழைத்து வர சிறப்பு விமானம், இன்று பிற்பகல் மசார்-இ-ஷெரீப்பிலிருந்து புறப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் (Afghanistan) மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் சுமார் 1500 இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானின் பால்க் மற்றும் தகார் பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு பால்க் பகுதியில் தலிபான்கள் பல பகுதிகளைக் கைப்பற்றினர்.
தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாரில் இருந்து இந்தியா தனது தூதர்களை தாயகம் திரும்ப அழைத்து வந்த சில நாட்களுக்குப் பிறகு, மசார்-இ-ஷெரீப்பில் இருந்து இந்தியர்களை தாயகம் திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது
ஆப்கானிஸ்தானில் தலிபான் இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதால் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. மத்தியஅரசு மேற்கொண்ட ராஜீய நடவடிக்கையில், கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க கூட்டம் ஒன்றை நடத்தினார்.
ALSO READ | Afghanistan: காந்தஹார் மீது ராக்கெட் தாக்குதல்; விமானங்கள் அனைத்தும் ரத்து
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐநாவிற்கான இந்தியாவின் தூதர் டி. திருமூர்த்தி, தலிபான்கள் வன்முறையை கைவிட்டு, நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மற்றும் அல்கொய்தா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹனிஃப் ஆத்மர், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கரை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அழைத்த சில நாட்களிலேயே ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகியுள்ளது.
ALSO READ | தாலிபான்களுக்கு பயங்கரவாதிகளை சப்ளை செய்கிறார் இம்ரான்கான்: ஆப்கான் அரசு
தலிபான்கள், ஒரு அரசியல் தீர்வை எட்டுவதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும் வன்முறை மற்றும் இராணுவத்தை அச்சுறுத்துதல் போன்றவை பேச்சுவார்த்தையை வலுப்படுத்தாது" என்றும் திருமூர்த்தி கூறினார்.
ALSO READ | ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெறியாட்டம்; வீதிகளில் சிதறிக் கிடக்கும் சடலங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR