கலிஃபோர்னியா: பாரில் மர்மநபர் நடத்திய துப்பக்கிசூட்டில் 13 பேர் பலி

கலிஃபோர்னியா மாநிலத்தில் பார் ஒன்றில் மர்ம நபர் கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்...! 

Updated: Nov 8, 2018, 07:02 PM IST
கலிஃபோர்னியா: பாரில் மர்மநபர் நடத்திய துப்பக்கிசூட்டில் 13 பேர் பலி

கலிஃபோர்னியா மாநிலத்தில் பார் ஒன்றில் மர்ம நபர் கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்...! 

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் மதுபான விடுதி ஒன்றில்  கூடியிருந்தவர்கள் மீது மர்ம நபர் கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். 

கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள தவுசண்ட் ஓக்ஸ் (Thousand Oaks) நகரில் உள்ள பிரபல மதுபான விடுதி ஒன்றில் கல்லூரி மாணவர்களின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு சுமார் 200 பேர் கூடியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் கைத்துப்பக்கியால் கண்மூடித் தனமாக சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அந்த நபர் கண்ணீர்புகைக் குண்டை வீசியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதில்  படுகாயம் அடைந்த பலர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒரு காவல் அதிகாரி உட்பட 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறியுள்ளனர். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபரும் மதுபான விடுதிக்குள்ளேயே இறந்து கிடந்ததாகவும், அவன் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.