பாக்., குண்டுவெடிப்பு, 100 பேர் பலி, ஐ.எஸ் பொறுப்பேற்பு

சுமார் 100க்கு மேல் பலி கொண்ட தற்கொலை படைத் தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

Last Updated : Feb 17, 2017, 08:37 AM IST
பாக்., குண்டுவெடிப்பு, 100 பேர் பலி, ஐ.எஸ் பொறுப்பேற்பு  title=

கராச்சி: சுமார் 100க்கு மேல் பலி கொண்ட தற்கொலை படைத் தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் சிந்து மாகாணத்தில் லால் ஷாபாஷ் குலந்தர் என்ற புகழ்பெற்ற தர்கா உள்ளது. அங்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வருவது உண்டு. 

இந்நிலையில் நேற்று அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர், தர்காவிற்கு நுழைந்து சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அப்போது அங்கு மாலை நேர பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது.

இந்த குண்டுவெடிப்பில் சிக்கி சுமார் 100 பேர் பலியாகி உள்ளனர். 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த தாக்குதலுக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் லால் ஷாபாஷ் குலந்தர் தர்கா குண்டுவெடிப்பிற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Trending News