நேபாளத்தின் (Nepal) பல இடங்களை சீனா (china) தடையின்றி ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் அந்நாடு அரசு இதை கண்டு கொள்ளாமல் மவுனமாக உள்ளது.
எல்லைகளை ஆக்கிரமிக்கும் சீனாவின் திட்டத்தை இந்தியா உலகிற்கு அம்பலப்படுத்தியிருந்தாலும், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு நேபாளத்தில் முழு ஆதரவு உள்ளது. இந்த ஆதரவை வேறு யாரும் அல்ல, அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஓலி யா ஆதரவாக உள்ளார். நேபாளத்தில் ஏழு எல்லை மாவட்டங்களில் உள்ள பல இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது என நேபாளத்தின் வேளாண் அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பயந்து பிரதமர் கே.பி.சர்மா ஒளி அமைதியாக இருக்கிறாரா என்ற வகையில் சந்தேகங்கள் எழுப்பபடுகின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியை (CCP) காப்பாற்ற நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (NCP) முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
பெரிய அளவில் ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிரதீப் கியாவாலி, நேபாளம் சீனா இடையில் எந்த எல்லை தகராறும் இல்லை. இந்தியாவுடன்தான் பிரச்சனை உள்ளது என்று கூறியுள்ளார்.
நேபாளத்தில் உள்ள டோலாக்கா, கோர்கா, தர்ச்சுலா, ஹம்லா, சிந்துபால் சவுக், சங்குவசபா மற்றும் ரசுவா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது.
சீனா இப்போது 33 ஹெக்டேர் நேபாள நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. நேபாளம் டிராகனின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மவுனமாக உள்ளது. நேபாளத்தின் மவுனத்தை சீனா சம்மதம் என எடுத்துக் கொண்டு முழு வீச்சில் ஆக்கிரமித்து வருகிறது.
மேலும் படிக்க | நேபாளத்தில் வலுவாக கால் ஊன்ற சீன கடைபிடித்த தந்திரம் என்ன…!!!
பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாத நாடுகளில், சீனா கடனகளை அள்ளிக் கொடுத்து தனக்கு அடிமையாக்கிக் கொள்ளும். இந்த தந்திரத்தின் மூலம் தான் அண்டை நாடுகளை அடிமை படுத்தி வைத்துக் கொண்டு காரியத்தை சாதித்துக் கொள்கிறது.
ஏற்கனவே, பிரதமர் கேபி..சர்மா ஒளி, உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு தரமால சீன நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி முதலீடுகள் செய்ய அனுமதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
நேபாள(Nepal) பிரதமர் கே.பி. ஷர்மா ஒளியின் (KP Sharma Oli) சொத்து மதிப்பு கடந்த ஆண்டுகளில் மிக அதிக அளவு அதிகரித்துள்ளது என்றும், பெருமளவு சொத்துக்களை இவர் வெளிநாடுகளில் குவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஹகியா சோபியாவிற்கு பிறகு, கோரா தேவாலயத்தை மசூதியாக மாற்றிய துருக்கி அதிபர்