கத்திரிக்காய் முற்றியதும் கடைக்கு வந்தது... தாவூத் முகவரியை பாகிஸ்தான் வெளியிட்டது..!!!

உண்மையை எவ்வளவு காலம் தான் மறைக்க முடியும். ஒரு நாள் ஒப்புக் கொண்டு தானே ஆக வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 22, 2020, 08:25 PM IST
  • நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) 2018 ஜூன் மாதத்தில், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக பாகிஸ்தான் மீது தடை விதிக்கும் நோக்கில் சாம்பல் பட்டியலில் சேர்த்தது.
  • முழுமையாக தடை விதிக்கப்பட்டால், பாகிஸ்தானால், எந்த நாட்டில் இருந்தும் நிதி உதவி பெற முடியாது.
  • பயங்கரவாதிகளுக்கு உதவுவது தொடர்பாக கடுமையான நிதித் தடைகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில், தடைசெய்யப்பட்ட 88 பயங்கரவாத குழுக்களின் பட்டியல் மூலம் பாகிஸ்தானின் ஒப்புதல் வாக்குமூலம் வந்துள்ளது.
கத்திரிக்காய் முற்றியதும் கடைக்கு வந்தது... தாவூத் முகவரியை பாகிஸ்தான் வெளியிட்டது..!!! title=

புதுடெல்லி: இந்தியாவினால் மிகவும் தேடப்பட்ட நபர்களில் ஒருவரான தாவூத் இப்ராஹிம் (Dawood Ibrahim) கராச்சியில் வசிக்கிறார் என்று பாகிஸ்தான் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக ஒப்புக் கொண்டுள்ளது. 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமான நிழல் உலக தாதாவான தவூத் இப்ரஹீமிற்கு, தஞ்சம் அளிக்கவில்லை என பல ஆண்டுகாலங்களாக மறுத்து வந்தது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பிற்கு பிறகு பாகிஸ்தானில் (Pakistan) மறைந்து வாழும் தாவூத் இப்ரஹீம், பாகிஸ்தான் உதவியுடன் அங்கிருந்த படியே தடையின்றி தனது கிரிமினல் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வந்தார்.

ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. பாகிஸ்தானில் அரசியல் ரீதியாக செல்வாக்கு படைத்தவர் தாவூத் இம்ராஹிம். அவர் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டாட்டின் சம்பந்தி என்பது அனைவரும் அறிந்த செய்தி தான்.

பாகிஸ்தானில் தாவூத் இம்ராஹிம் இருக்கிறார் என இந்தியா தொடர்ந்து கூறி வந்த போதிலும், பாகிஸ்தான் இல்லவே இல்லை என மறுத்து வந்தது.

ஆனால், இப்போது இதை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதோடு, அவர் இருக்கும் வீட்டு விலாசத்தையும் வெளியிட்டுள்ளது.

 ஆம் அது கராச்சியில் உள்ள ஒரு பங்களா. கராச்சியில் உள்ள க்ளிஃப்டனில், சவுதி மசூதி அருகே உள்ள ஒரு பங்களாவில் தாவூத் இப்ரஹீம் வசிக்கிறார்.

Pakistan list to FATF

மேலும் படிக்க | ஹகியா சோபியாவிற்கு பிறகு, கோரா தேவாலயத்தை மசூதியாக மாற்றிய துருக்கி அதிபர்

பயங்கரவாதிகளுக்கு உதவுவது தொடர்பாக கடுமையான நிதித் தடைகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில், தடைசெய்யப்பட்ட 88 பயங்கரவாத குழுக்களின் பட்டியல் மூலம் பாகிஸ்தானின் ஒப்புதல் வாக்குமூலம் வந்துள்ளது.

ஹபீஸ் சயீத், மசூத் அசார் மற்றும் தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட அவர்களின் தலைவர்கள் மீதும், பயங்கரவாத குழுக்கள் மீதும் கடுமையான நிதித் தடைகளை விதித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | இனி லண்டன் போவது இன்னும் எளிது... 'பஸ் டு லண்டன்' திட்டத்தின் விவரம்!!

பாரிஸை தளமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) 2018 ஜூன் மாதத்தில், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் சேர்த்ததோடு, 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள், நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்றால், பாகிஸ்தான் மீது முழுமையாக தடை விதிக்கப்படும் என கூறியது. முழுமையாக தடை விதிக்கப்பட்டால், பாகிஸ்தானால், எந்த நாட்டில் இருந்தும் நிதி உதவி பெற முடியாது. ஆனால் காலக்கெடு பின்னர் கோவிட் -19 தொற்றுநோய் பரவல் காரணமாக நீட்டிக்கப்பட்டது.

Trending News