டொனால்ட் டிரம்ப்; மத்திய கிழக்கு சமாதான முன்னெடுப்புக்கு உறுதியானவர்!

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மத்திய கிழக்கு சமாதான முன்னெடுப்புகளுக்கு 'மிகவும் உறுதியானவர், என்று  அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.  

Last Updated : Dec 7, 2017, 03:37 PM IST
டொனால்ட் டிரம்ப்; மத்திய கிழக்கு சமாதான முன்னெடுப்புக்கு உறுதியானவர்! title=

அமெரிக்க அதிபரான, ட்ரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு டிசம்பர் 2 அன்று பயணித்தார்.

அப்பயணத்தில் "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் அமைதி ஏற்பட தற்போது ஏதுவான சூழல் உருவாகியுள்ளது" என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் ஜெருசலேம் தொடர்பான அமைதி பேச்சு வார்த்தை முயற்சியில் ட்ரம்ப் இறங்கினார்.

இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக, அதிபர் ட்ரம்ப் அடுத்த வாரம் அறிவிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

கடந்த புதனன்று ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். என்பது குறிபிடத்தக்கது.

மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி டிரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது. டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் அதிபர் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மத்திய கிழக்கு சமாதான முன்னெடுப்புகளுக்கு 'மிகவும் உறுதியானவர்; என்று  அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், ட்ரம்பின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையே பெரும் அரசியல் விளைவை ஏற்படுத்தும் என்று பாலஸ்தீன அரசியல் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக ட்ரம்ப் அறிவிக்க உள்ளதற்கு பாலஸ்தீன தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Trending News