நியூயார்க்: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு டொனால்டு டிரம்ப் இவ்வாண்டின் நபர் என்கிறது டைம் பத்திரிகை.
பிரபல ஆங்கில பத்திரிக்கை ‘டைம்’ ஒவ்வொரு ஆண்டும், அதிகளவில் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்துகிற உலக பிரசித்தி பெற்ற அரசியல்வாதிகள், கலைஞர்கள், வீரர்கள், தொழில் அதிபர்களில் இருந்து அந்த ஆண்டின் சிறந்த மனிதரை தேர்ந்தெடுத்து அட்டையில் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் இறுதி தேர்வு பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன், இங்கிலாந்து சுதந்திர கட்சி தலைவர் நைஜல் பாரேஜ், அமெரிக்க பாடகி பியான்ஸ், ஜிம்னாஸ்டிக் வீரர் சிமோன் பைல்ஸ், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட இடம் பெற்றிருந்தனர்.
இதில் இணையதள வாக்கெடுப்பில் 18% வாக்குகளுடன் பிரதமர் மோடி அபார வெற்றி பெற்றார்.
ஆனால் ‘டைம்’ பத்திரிக்கை, ‘அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், இந்த ஆண்டின் சிறந்த மனிதர்’ என அறிவித்துள்ளனர்.
Donald Trump is TIME's Person of the Year 2016 #TIMEPOY https://t.co/5pTGOksevE pic.twitter.com/N8BtqTu9Nl
— TIME (@TIME) December 7, 2016
See why Donald Trump was chosen as TIME's Person of the Year 2016 #TIMEPOY https://t.co/T7E33fClze pic.twitter.com/7OsHmndhEW
— TIME (@TIME) December 7, 2016
இந்த தேர்வு குறித்து டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இது மிகப்பெரிய கவுரவம். இது மிகுந்த அர்த்தம் கொண்டது. டைம் பத்திரிக்கையில் இடம் பெறப்போவது அதிர்ஷ்டம் என அவர் கூறியுள்ளார்.