மெர்சிடிஸ் (Mercedes) காரில் எண்ணெய் கசிவு ஏற்படும் சாத்தியகூறு உள்ளதால் சீனாவில் உள்ள 6,60,000 வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ள மெர்சிடிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
668,954 வாகனங்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கும்.
ALSO READ | இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் கைது.... கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி...!!!
எண்ணெய் கசிவு ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் (China) உள்ள 660,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனம் திரும்ப பெற்றுக் கொள்ளும்.
உயர் அழுத்த எரிபொருள் குழாய் மற்றும் குறைந்த அழுத்த எரிபொருள் குழாய் ஆகியவற்றுக்கு இடையேயான உள்ள சீல் கால போக்கில் பலவீனமடையக்கூடும். இதனால், குளிர்வான காலநிலையில், வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது எண்ணெய் கசிவு ஏற்ப்படலாம் சீனாவின் சந்தை ஒழுங்குமுறை அமைப்பு, இணையதளத்தில் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | புகழ் பெற்றஅமெரிக்க ராப் பாடகர் Kanye West போட்டியிட தொழில் அதிபர் Elon Musk ஆதரவு
வாகனங்கள் திரும்ப பெறப்படும் என்ற செய்தியை சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான, சின்ஹுவா செய்தி நிறுவனம் (Xinhua News Agency) ஞாயிற்றுக்கிழமை செய்தியை வெளியிட்டிருந்தது.
668,954 வாகனங்களை திரும்பப் பெறும் நடவடிக்கை டிசம்பர் மாதம் தொடங்கப்படும். 2013 பிப்ரவரி முதல் 2017 ஜூன் வரை தயாரிக்கப்பட்ட பல மாடல்கள் இதில் உள்ளன. இதில் C-கிளாஸ், E-கிளாஸ், V-கிளாஸ், GLK-கிளாஸ், CLS-கிளாஸ், SLC -கிளாஸ், GLC SUV மற்றும் VS20 VITO ஆகிய வாகன மாடல்கள் அடங்கும்.
இதில் பெரும்பாலான வாகனங்கள் சீனாவில் உள்ள பெய்ஜிங் பென்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. சுமார் 12,500 வாகனங்கள் ஃப்யூஜியன் பென்ஸ் ஆட்டோமேடிவ் நிறுவனத்தால் (Fujian Benz Automotive Co.) தயாரிக்கப்பட்டது. மேலும் இதில், சுமார் 36,000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் ஆகும்.
பழுதான பாகங்களை டீலர்கள் இலவசமாக மாற்றித் தருவார்கள்.
இறக்குமதி செய்யப்பட்ட 4,653 மெர்சிடிஸ் G -கிளாஸ் செடான் வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான சைல்ட் லாக் சரியாக இல்லை என்பதால் கடந்த மாதம் திரும்ப பெறப்பட்டதாக, சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது. அந்த வாகனங்கள் பிப்ரவரி 14, 2018 முதல் செப்டம்பர் 24, 2019 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ஆகும்.