உடலுறவு சாம்பியன்ஷிப் போட்டி எனப் பரவிய தகவல் போலியானவை -முழு விவரம் இதோ!

European Sex Championship: ஐரோப்பா நாடான சுவீடன் உடலுறவை விளையாட்டு போட்டியாக மாற்றி, அதற்கென ஒரு சாம்பியன்ஷிப் தொடரை வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் நடத்த உள்ளது. இந்த போட்டி தொடர் குறித்த முழு தகவல்களையும் இங்கு அறிந்துகொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 3, 2023, 04:49 PM IST
  • தினமும் 6 மணிநேரம் போட்டியாளர்கள் இத்தொடரில் 'விளையாட' நேரிடும்.
  • பார்வையாளர்கள், நடுவர்களின் முடிவுகளை பொறுத்து போட்டியாளர்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும்.
  • இதில், எந்த பாலின பாகுபாடும் இன்றி யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
உடலுறவு சாம்பியன்ஷிப் போட்டி எனப் பரவிய தகவல் போலியானவை -முழு விவரம் இதோ! title=

European Sex Championship:​ முற்போக்கான மதிப்புகள் மற்றும் சமத்துவத்திற்கான முன்னெடுப்புகளால் மிகவும் பிரபலமான சுவீடன் நாட்டில், தற்போது உடலுறவை ஒரு விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது எனத் தகவல்கள் வெளியானது. அதாவது ஐரோப்பிய நாடான சுவீடன் முதல் முறையாக ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப்பை நடத்த தயாராக உள்ளதாக செய்தி பரவியது. ஆனால் அது உண்மை இல்லை எனத் தெரியவந்துள்ளது. Fact Check/Verification மூலம் ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் ஸ்வீடனில் நடைபெற உள்ளதாகப் பரவிய போலித்தகவல் எனத் தெரியவந்துள்ளது.

முன்னதாக பரவியத் தகவல் என்ன? அறிந்துக்கொள்ளுங்கள்

வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷனால் ஏற்பாடு செய்யப்படும் இந்த சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் 16 வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிடுவார்கள் எனவும், பல வாரங்கள் நீடிக்கும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கள் திறமைகள் மற்றும் திறன்களை பலரும் வெளிப்படுத்துவார்கள் என தெரிகிறது. ஒவ்வொரு நாளும், போட்டியாளர்கள் ஆறு மணி நேரம் இந்த போட்டியில் ஈடுபடுவார்கள், தனிப்பட்ட போட்டிகள் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் பலதரப்பட்ட பிரிவுகளில் நடைபெறுகிறது. துணையை கவர்தல் (Seduction), உடல் மசாஜ்கள் (Body Massages), சிற்றின்பம் அளிக்கும் உடல் பகுதிகளில் ஈடுபடுதல் (Exploring erotic zones), வாய்வழி பாலியல் (Oral Sec), உடலுறவு (Penetration), சகிப்புத்தன்மை (Endurance), உடல் தோற்றம் (Physical Appearance), வெவ்வேறு போஸ்களை மேற்கொள்ளுதல் (Execution of Poses), போஷிஷன் மாற்றங்களில் படைப்பாற்றல் (Creativity in position changes), ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் உச்ச நிலை அடைதல் (number of orgasms within a given time) பாலியல் உடலுறவின் போதான கலை செயல்திறன் மற்றும் இந்த போட்டியின் போது ரத்த அழுத்தம், இதய துடிப்பு அதிகரிக்கும் திறன் உள்ளிட்டவை இதில் அடங்கும். 

மேலும் படிக்க | அபார அழகு! ஆனால் ஆபத்தான உடல்வாகு! இணையத்தை உலுக்கும் ஜெர்மன் அழகி

கூடுதல் பிரிவுகளில், மிக அழகான மற்றும் சிக்கலான போஸ், குழு மற்றும் பார்வையாளர்களால் தீர்மானிக்கப்படும் மிகவும் கலைத் தொடர்பு, மேலும் அதிக செயல்பாட்டைக் காட்டும் ஜோடி, காமசூத்ராவில் கலைத்திறன் மற்றும் நடுவர் மற்றும் பார்வையாளர்களிடையே அதிக செல்வாக்கு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. ஒவ்வொரு துறையிலும், பங்கேற்பாளர்கள் 5 மற்றும் 10 புள்ளிகளுக்கு இடையில் மதிப்பெண் பெறலாம். பொது வாக்களிப்பு மற்றும் ஐந்து நீதிபதிகள் குழுவின் கூட்டு தீர்மானத்தால் முடிவுகள் தீர்மானிக்கப்படுகிறது. போட்டியானது மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னேற ஒவ்வொரு மட்டத்திலும் பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளை பெற வேண்டும்.

ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் பங்கேற்பாளர்களை அவர்களின் பாலியல் நோக்குநிலை அல்லது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் வரவேற்கிறது. இந்த விளையாட்டில் பாலியல் நோக்குநிலை (Sexual Orientation) ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க முடியும் என்று அமைப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர், இது எதிர்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். "விளையாட்டு உத்திகளின் ஒரு பகுதியாக பாலியல் நோக்குநிலையை (Sexual Orientation) இணைப்பது ஐரோப்பிய நாடுகளில் ஒரு அற்புதமான வளர்ச்சியாக இருக்கும்" என்று போட்டி அமைப்பாளர் கூறினார். ஸ்வீடிஷ் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸ் தலைவர் டிராகன் பிராட்டிச், பாலினத்தை விளையாட்டாக அங்கீகரிப்பது தவிர்க்க முடியாதது என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பாலியல் செயல்பாடு மூலம் உடல் மற்றும் மன நலத்திற்கான சாத்தியங்களை அவர் எடுத்துரைத்தார்.

"வேறு எந்த விளையாட்டையும் போலவே, உடலுறவில் விரும்பிய முடிவுகளை அடைவதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. எனவே, இந்த களத்திலும் மக்கள் போட்டியிடத் தொடங்குவது தர்க்கரீதியானது" என்று பிராட்டிச் விளக்கினார். இந்த விளையாட்டின் தனித்துவமான தன்மையை அவர் விளக்கினார். "இங்கு எதிராளிக்கு மகத்தான மகிழ்ச்சியை வழங்குவதே குறிக்கோள். இந்த விளையாட்டில், போட்டியாளரின் வெற்றியானது அவர்களின் கூட்டாளியை திருப்திப்படுத்தும் திறனால் அளவிடப்படுகிறது. பாரம்பரிய விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது ஒரு புரட்சிகர மற்றும் தனித்துவமான அணுகுமுறையை வளர்க்கிறது. அங்கு தோல்வி பெரும்பாலும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. மற்ற விளையாட்டுகள் எதிராளிகளுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தினாலும், உடலுறவை ஒரு விளையாட்டு போட்டியாக கருதுவது என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இன்பத்தை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உங்கள் துணை எவ்வளவு மகிழ்ச்சியை அனுபவிக்கிறீர்களோ, அவ்வளவு புள்ளிகளை நீங்கள் பெறுவீர்கள்" என்றார். 

ஸ்வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷன், உடலுறவை ஒரு விளையாட்டு போட்டியாக கருதுவது என்பது சிக்கலான முயற்சி என்று கூறியது. அதற்கு படைப்பாற்றல், உணர்ச்சி நுண்ணறிவு, கற்பனை, உடல் தகுதி, சகிப்புத்தன்மை மற்றும் வேலை திறன் ஆகியவை தேவையாகும். அவதானிப்புகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் போட்டி விதிகள் காலப்போக்கில் உருவாகும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டார் எனத் தகவல் பரவியது. 

ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் தகவல் போலியானது

ஆனால் Goterborgs Posten என்கிற ஸ்வீடன் செய்தி ஊடகம் வெளியிட்டிருந்த கட்டுரையில், ஏப்ரல் 26, 2023 அன்று வெளியான செய்தியில் உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்க கொடுக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கடந்த ஜனவரி 19, 2023 அன்று வெளியான TV4 என்கிற ஸ்வீடன் செய்தி ஊடகத்தின் கட்டுரையில் அந்நாட்டு தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் BJorn Eriksson, உடலுறவு விளையாட்டாக அங்கீகரிப்படவில்லை. தவறான செய்தி என்று விளக்கமளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Squid Game: விளையாட்டு தெரியாமலேயே ரூ.11.5 லட்சம் பரிசுத் தொகையை வென்ற தமிழர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News