கேப் ஓட்டுநர்கள், டெலிவரி பாய்ஸுக்கு சூப்பர் செய்தி: இனி இவர்களுக்கும் EPFO ஓய்வூதியம் கிடைக்கும்

EPFO Update: கிக் தொழிலாலாளர்கள் என அழைக்கப்படும் டெலிவரி பாய்ஸ் (Gig Workers) மற்றும் கேப் டிரைவர்களுக்கு பிஎஃப் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்கக்கூடும். இதில் ஓய்வூதியமும் அடங்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 12, 2024, 01:40 PM IST
  • அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சலுகைகள்.
  • இந்த கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
கேப் ஓட்டுநர்கள், டெலிவரி பாய்ஸுக்கு சூப்பர் செய்தி: இனி இவர்களுக்கும் EPFO ஓய்வூதியம் கிடைக்கும் title=

EPFO Update: கேப் ஓட்டுநர்கள், உணவு மற்றும் பிற பொருட்களை டெலிவரி செய்யும் நபர்கள் என சில குறிப்பிட்ட பணியாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) இந்த நல்ல செய்தியை அளித்துள்ளது.

EPF Amount, Pension: கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சலுகைகள்

கிக் தொழிலாலாளர்கள் என அழைக்கப்படும் டெலிவரி பாய்ஸ் (Gig Workers) மற்றும் கேப் டிரைவர்களுக்கு பிஎஃப் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்கக்கூடும். இதில் ஓய்வூதியமும் அடங்கும். இதற்காக புதிய கொள்கையை அரசு வகுத்து வருகிறது. இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு டெலிவரி செய்பவர்கள் மற்றும் வண்டி ஓட்டுநர்கள் உட்பட நாட்டில் உள்ள கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சலுகைகளை வழங்க அமைச்சகம் செயல்பட்டு வருவதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தவ்ரா தெரிவித்தார்.

நிதியமைச்சகம் மற்றும் CII ஏற்பாடு செய்த உலகளாவிய பொருளாதாரக் கொள்கை மன்றத்தில், 2030 ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 65% பேர் வேலை செய்யும் வயதினராக இருப்பார்கள் என்றும், தொழிலாளர் பிரச்சனைகள் மற்றும் பற்றாக்குறையை சமாளிப்பதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கும் என்றும் சுமிதா தாவ்ரா கூறினார். 

மேலும் படிக்க | EPFO புத்தாண்டு பரிசு: ATM மூலம் பிஎஃப் பணம், எப்போது? அமைச்சகம் அளித்த அட்டகாசமான அப்டேட்

அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

அடுத்த 10 ஆண்டுகளில் உலகிற்கு வரும் தொழிலாளர்களில் 24% பங்களிப்பை இந்தியா அளிக்கும். இதன் காரணமாக, உலகளாவிய பணியாளர்களுக்கு இந்தியா பெரும் பங்களிப்பை வழங்கும் என்று தாவ்ரா கூறினார். இந்தியாவில் தொழிலாளர் சந்தையின் அதிகமான பகுதியை ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதை பற்றி குறிப்பிட்ட அவர், 2017 முதல், 7 கோடிக்கும் அதிகமான மக்கள் EPFO-ல் இணைந்துள்ளனர் என்றும், மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

Social Security System:இந்த கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்

நாட்டிலேயே முதன்முறையாக சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கிக் தொழிலாளர்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் வரையறை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாவ்ரா கூறினார். இந்தத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதில் அமைச்சகம் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் இது குறித்து பேசியிருந்தார். கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சலுகைகளை வழங்குவதற்கான கொள்கை உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இது நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

Central Government: மத்திய அரசின் திட்டம் என்ன?

- கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சில காலத்திற்கு முன்பும் அரசாங்கம் கூறியிருந்தது. 
- கிக் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்குவதும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் கிக் தொழிலாளர்களை ஓய்வூதிய வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- சேவைத் துறையில் பணிபுரியும் அனைத்து பெரிய நிறுவனங்களுடனும் (Swiggy, Zomato போன்றவை) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் படிக்க | ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News