தெற்கு பாகிஸ்தான் நகரமான கராச்சியில் உள்ள வழக்கறிஞரான நிஷா ராவிற்கு வாழ்க்கை அத்தனை எளிதானதாக இருக்கவில்லை.
ஒரு காலத்தில் வாழ்வாதாரத்தை ஈட்ட வீதிகளில் பிச்சை எடுத்த இந்த 28 வயதான திருநங்கை இப்போது பாகிஸ்தானின் முதல் திருநங்கை நீதிபதியாவதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
"எனது குறிக்கோள், எனது நோக்கம், எனது கனவு எல்லாமே பாகிஸ்தானின் முதல் திருநங்கை (Transgender) நீதிபதியாக வேண்டும் என்பதுதான்” என்று நிஷா செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
பாக்கிஸ்தானில் (Pakistan), திருநங்கைகளை சம மனிதர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைக்கு தண்டனையை சட்டப்பூர்வமாக்கிய ஒரு சட்டம் 2018 இல் அங்கீகரிக்கப்பட்டது.
இருப்பினும், உண்மையான நிலவரத்தை எந்த சட்டத்தாலும் மாற்ற முடியவில்லை.
பாகிஸ்தானில் பெரும்பாலான திருநங்கைகள் சமத்துவமின்மையையும் அநீதியையும் எதிர்கொண்டு வீதிகளில் பிச்சை எடுக்கிறார்கள் அல்லது திருமணங்களில் நடனமாடுகிறார்கள்.
லட்சியவாதியான இந்த வழக்கறிஞரின் கதையும் அந்த வகையில்தான் தொடங்கியது. கிழக்கு நகரமான லாகூரில் (Lahore) ஒரு படித்த நடுத்தர வருமானம் கொண்ட குடும்பத்திலிருந்து தான் வருவதாக ராவ் கூறுகிறார்.
தான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த ராவ், 18 வயதில் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
இந்த நகரத்தில் தப்பிப்பிழைக்க வேண்டுமானால் ஒன்று ஒரு பாலியல் தொழிலாளியாக வெண்டும் அல்லது பிச்சை எடுக்க வேண்டும் என அவருக்கு அடைக்கலம் கொடுத்த அவர் சமூகத்தைச் சேர்ந்த முதியவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர்.
ராவ் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுக்கத் தொடங்கினார். ஆனால் ஒரு நாள் தனது விதி மாற்றப்படும் என்று உறுதியாக இருந்தார்.
அவர் பிச்சை எடுத்து வந்த பணத்தை தனது சட்ட வகுப்புகளுக்கு செலவழித்தார்.
பல வருட உழைப்பின் விளைவாக ராவ் ஒரு வழக்கறிஞராக ஆனார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் பயிற்சி பெறுவதற்கான உரிமத்தைப் பெற்று கராச்சி (Karachi) பார் அசோசியேஷனில் உறுப்பினரானார்.
ராவ் ஏற்கனவே 50 வழக்குகளில் வாதாடியுள்ளார். திருநங்கைகளின் உரிமைகளுக்காக செயல்படும் ஒரு டிரான்ஸ்-ரைட்ஸ் அரசு சாரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அவர் பல சேவைப் பணிகளையும் செய்து வருகிறார்.
ALSO READ: Scotland அரசு அந்நாட்டு பெண்களுக்கு அளித்துள்ள மிகப்பெரிய பரிசு: Free Sanitary Pads
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR