God of Wine: மாயமாய் மறைந்த மதுவின் கடவுள்! 50 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட சிலை

ரோமானிய கடவுளான டியோனிசஸின் சிலை 50 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2022, 08:32 AM IST
  • மீட்கப்பட்டார் மதுவின் கடவுள்!
  • 50 ஆண்டுகளுக்கு முன் மாயமான சிலை
  • முதலாம் நூற்றாண்டை சேர்ந்த வெண்கல சிலை
God of Wine: மாயமாய் மறைந்த மதுவின் கடவுள்! 50 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட சிலை title=

பாரீஸ்: ஒயின் கடவுள் என்று அழைக்கப்படும் கிரேக்க-ரோமானிய கடவுளான டியோனிசஸின் (Statue of Dionysus) சிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு காணமல் போனது.

50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட மதுவின் கடவுள் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. 1973 டிசம்பரில் இரவு நேரத்தில் ஜன்னலை உடைத்து திருடர்கள் மதுவின் கடவுளை கடத்திச் சென்றனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட கிரேக்க-ரோமன் கடவுளான (Greco-Roman Religion) டயோனிசஸ் சிலை தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. 'டச்சு ஆர்ட் டிடெக்டிவ்' ஆர்தர் பிராண்ட் ('Dutch Art Detective' Arthur Brand) இந்த அரிய ரோமானிய சிலையை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தது. 

இந்த சிலை பிரான்சின் மிக முக்கியமான பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்பட்டது. கிரேக்க-ரோமன் மதத்தில், பாக்கஸ் (Bacchus) அல்லது டியோனிசஸ் மதுவின் கடவுளாகக் கருதப்படுகிறார்.

ALSO READ | சாமி சிலைகளை கடத்திய பா.ஜ.க நிர்வாகி உட்பட 4 பேர் கைது

ஜன்னலை உடைத்து திருடப்பட்ட சிலை  
1973 ஆம் ஆண்டு டிசம்பர் குளிர்கால இரவில், திருடர்கள் ஜன்னலை உடைத்து, 'ஒயின் கடவுள்' பச்சஸின் 40 செமீ  நீளமுள்ள சிலையைத் திருடிச் சென்றனர். அதன்பிறகு சிலையை மும்முரமாக தேடி வந்தனர். ஆனால் 50 ஆண்டுகளாக சிலை கிடைக்கவில்லை.

தற்போது கண்டெடுக்கப்பட்ட சிலை, கிழக்கு பிரான்சில் உள்ள Musée du Pays Chatilonaise இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இது மதுவுக்கு அதிபதியாக கருதப்படும் சிலை ஆகும். முதல் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலச் சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

அருங்காட்சியகத்தின் இயக்குனர், சிலை திரும்ப கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார், இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்று கூறினார். நாங்கள் அனைவரும் கிரேக்க-ரோமன் தெய்வத்தின் சிலையை மீண்டும் அருங்காட்சியகத்தில் பார்க்க விரும்பினோம், இப்போது எங்கள் விருப்பம் நிறைவேறியுள்ளது என்று அவர் கூறினார்.

ALSO READ | ஆய்வகத்தில் இறைச்சி உற்பத்தி! எதிர்கால உணவுக்காக சீனாவின் திட்டம்

திருடர்கள் சில ரோமானிய பழங்காலப் பொருட்களையும் சுமார் 5,000 ரோமானிய நாணயங்களையும் திருடிச் சென்றதாக பிராண்ட் தெரிவித்தது. அதில், மிக முக்கியமான கிரேக்க-ரோமன் கடவுளான பாக்கஸ் அல்லது டியோனிசஸின் ஒற்றை வெண்கலச் சிலையும் இருந்தது. 

மக்கள் மகிழ்ச்சி 
முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை இப்போது Musée du Pays Chatillonaise அருங்காட்சியகத்தில் உள்ளது. ரோமானிய கலைப்பொருட்களின் சேகரிப்புக்காக பிரபலமான அருங்காட்சியகம் இது.

'காட் ஆஃப் ஒயின்' பச்சஸ் சிலை திரும்ப கிடைத்ததற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ALSO READ | 5 மாதங்களுக்கு பிறகு கணவன் கிம் ஜாங் உன்னுடன் பொதுவில் தோன்றிய மனைவி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News