உக்ரைனில் ஏஞ்சலினா ஜோலி...ஏவுகணை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு

உக்ரைனின் லிவிவ் நகரில் நடிகை ஏஞ்சலினா ஜோலி பொதுமக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது  திடீரென ஏவுகணை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Written by - Chithira Rekha | Last Updated : May 2, 2022, 08:50 PM IST
  • உக்ரைனில் ஏஞ்சலினா ஜோலி
  • பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடல்
  • திடீரென ஏவுகணை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு
உக்ரைனில் ஏஞ்சலினா ஜோலி...ஏவுகணை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு title=

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். லிவிவ் நகருக்கு சென்ற அவர் அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் உரையாடினார். பின்னர் அங்குள்ள தன்னார்வலர்களுடனும், குழந்தைகளுடனும் ஏஞ்சலினா ஜோலி உரையாடினார்.

ஐ.நாவின் அகதிகளுக்கான சிறப்பு தூதராக இருக்கும் ஏஞ்சலினா ஜோலியின் உக்ரைனுக்கு பயணம் அலுவல் தொடர்பானதா என்பது குறித்த தகவல் தெரியவில்லை. ஏஞ்சலினா ஜோலி லிவிவ் நகரத்தை வந்தடையும் வரை அவரது வருகை குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என அந்நகர ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கிவ் மீது குண்டு மழை பொழியும் ரஷ்யா; ஐநா தலைவர் பயணத்தின் போது நடந்த தாக்குதல்

மேலும், ஏஞ்சலினா இந்த திடீர் எதிர்பாராத வருகை அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்ததாகவும், உண்மையில் வந்தது அவர்தான் என்பதை மக்களால் நம்ப முடியவில்லை எனவும் லிவிவ் ஆளுநர் கூறியுள்ளார். உக்ரைனின் கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து நடத்தப்பட்ட ரஷ்ய படைகளின் ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகளுடன் உரையாடுவதற்காக நடிகை ஏஞ்சலினா ஜோலி வந்திருப்பதாகவும்,  லிவிவ் ஆளுநர் குறினார்.

ஏஞ்சலினா ஜோலி லிலிவ் நகர மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது ஏவுகணை எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர் பாதுகாப்பான இடத்தை நோக்கி விரைந்து செல்லும் வீடியோ பதிவு வெளியாகி உள்ளது. உக்ரைன் மக்களின் தினசரி வாழ்க்கை எப்படி உள்ளது என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாக இணையதளத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News