இந்தோனேஷியா ராணுவம் விமான விபத்து- 13 பலி

இந்தோனேஷியா ராணுவ விமானம் ஹெர்குலஸ் சி - 130 விமானம், பப்புவா மாகாணத்தில் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 13 பேர் பலியானார்கள்.

Last Updated : Dec 18, 2016, 12:09 PM IST
இந்தோனேஷியா ராணுவம் விமான விபத்து- 13 பலி

ஜகர்த்தா: இந்தோனேஷியா ராணுவ விமானம் ஹெர்குலஸ் சி - 130 விமானம், பப்புவா மாகாணத்தில் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 13 பேர் பலியானார்கள்.

இந்தோனேசியாவில் ஹெர்குலஸ் சி-130 ரக ராணுவ சரக்கு விமானம் திமிகா நகரில் இருந்து பப்புவா மாகாணத்துக்கு உணவு பொருட்களை எடுத்து சென்றது. விமானத்தில் மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர். விமானம் டங்கிய மலைப் பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்தது. தரைஇறங்க இருந்த நிலையில் காலை 6.15 மணியளவில் விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பை அந்த விமானம் இழந்தது. இதனால் அதன் நிலை குறித்து அறிய அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

இதற்கிடையே, அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் பலியாகினர். 

More Stories

Trending News