அமெரிக்க விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி மரணம்?

Last Updated : Jun 14, 2016, 02:53 PM IST
அமெரிக்க விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி மரணம்? title=

உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இன்று பல்வேறு தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். 'மேற்காசிய நாடுகளான, சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தங்களின் அமைப்புகளை உலகம் முழுவதும் நிறுவுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இஸ்லாமிய எதிரி நாடுகள் மீது குறி வைத்து கொடூர தாக்குதல் நடத்துவது அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இணைய சேவை 'ஹெல்ப் டெஸ்க்' உலகெங்கும், பயங்கரவாத கருத்துகளை பரப்பவும், ஐ.எஸ்., அமைப்பிற்கு ஆள் சேர்க்கவும், பயங்கரவாதிகள், இணையதளங்களை, 'ஆயுதமாக' பயன்படுத்தி வருகின்றனர். 

சமீபத்தில் அந்த அமைப்பினர் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவது உலக நாடுகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனிடையே சிரியா தலைநகர் டமாஸ்கஸ் , ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. இதில் ரசாயன கலவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சிரியா, ஈராக் தவிர உலகம் முழுவதும் பாரீஸ், ஏமன், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிரியாவில் உள்ள ரக்கா நகரில் அமெரிக்கா கூட்டுப்படையினர் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதாக, ஈரான் மீடியா, துருக்கி பத்திரிகை, அரேபிய பத்திரிகையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இதைக்குறித்து அமெரிக்க கூட்டுப்படை சார்பில் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.

Trending News