பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்து வந்த நவாஸ் ஷெரீப் கடந்தாண்டு ஜூலை மாதம் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில், அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் அவர் தனது பிரதமர் பதவியை இழந்தார். அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வெளியானது. இதனையடுத்து நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் மருமகன் கேப்டன் சப்தார் நவாசு கைது செய்யப்பட்டு அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து நவாஸ் ஷெரீப் தரப்பில் மேல்முறையீடு செய்யபப்ட்டது. இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் கேப்டன் சப்தார் நவாசுக்கு எதிரான தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த மூன்று பேரையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Islamabad High Court has suspended jail terms of former Pak PM Nawaz Sharif, his daughter Maryam Nawaz and son-in-law Captain (retd) Muhammad Safdar in Avenfield case: Geo News pic.twitter.com/LI56PGFsC6
— ANI (@ANI) September 19, 2018
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அவர்களை விடுதலை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளது.