10 மாடிகள் கொண்ட கட்டடத்தில் லிஃப்ட் பாதி வழியில் பழுதாகி நிற்பது, மின்தடையால் பலமணி நேரத்திற்கு லிஃப்ட் நிறுத்தப்படுவது போன்ற செய்திகளை அடிக்கடி காண முடியும். அதுபோல, மூடும் லிஃப்டின் கதவில் கை, கால்களை விட்டு மாட்டிக்கொள்வது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன.
அந்த வகையில், ரஷ்யாவில் லிஃப்ட் ஒன்று கோளாறாகி, கதவை மூடாமலேயே திடீரென அடுத்த தளத்திற்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது. லிஃப்ட் ஒரு தளத்தில் நின்றுகொண்டிருந்தபோது, ஒருவர் அதில் இருந்து வெளியேறுகிறார், உடனே மற்றொருவர் லிஃப்டில் ஒரு காலை வைத்தபோது, திடீரென அந்த லிஃப்ட் மேல ஏறத்தொடங்கியது.
மேலும் படிக்க | Video: லிஃப்டில் சிக்கிய 7 பேர் - போராடி மீட்ட காவலர்கள்; குவியும் பாராட்டு!
ஒரு காலை மட்டும் வைத்திருந்த அவரை லிஃப்ட் தீடீரென்று மேல தூக்கிச்செல்ல, அவர் ஒரு கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்து பின்நகர்ந்தார். ஒருவேளை அவர் சுதாரிக்காமல் இருந்திருந்தால், அவரின் தலை மேல் தளத்தில் பலமாக மோதியிருக்க வாய்ப்புள்ளது. நல்வாய்ப்பாக, அவர் பின்நகர்ந்துவிட்டார். இந்த சம்பவம் அந்த லிஃப்டின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
#VideoViral #video #Viral #Lift #Russia pic.twitter.com/V3IXRT6DPh
— IND TV (@VishalDharm1) October 10, 2022
அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், அந்த நபர் மொபைல் பார்த்துக்கொண்டே அந்த லிஃப்ட்டில் ஏற முற்பட்டார். போனை பார்த்து வந்து, இதை கவனிக்காமல் இருந்திருந்தால் அவரின் உயருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும். எனவே, லிஃப்டில் ஏறும்போதோ, இறங்கும்போதோ மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | வகுப்பிற்குள் நுழைந்த குரங்கு செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ