மலேசியாவில், உணவகம் நடத்தும் ஒருவர் கூறிய ஒருயோசனை, சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
மலேசியாவில் அரிசி உணவுடன் கூடவே, ரொட்டியும் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு வகையாக உள்ள நிலையில், தேவைக்கேற்ப சிறந்த வகையில் ரொட்டி தயாரிப்பவர்கள் கிடைப்பதில்லை என்றும் இங்கு உணவகம் நடத்தி வரும் கமருல் ரிசல் கூறுகிறார். இங்குள்ள ரொட்டி தயாரிப்பாளர்களுக்கு மாதம் சுமார் 90 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.
கமருல் தனது உணவகத்தில் ரொட்டி செய்யும் வேலையை தானே செய்கிறேன் எனக் கூறிய கமருல் ரிசல் வார நாட்களில், ஒரு நாளைக்கு, 500 ரொட்டிகள் வரை செய்து விற்பனை ஆகிறது எனவும், வார இறுதி நாட்களில் 700-800 ரொட்டிகள் வரை விற்பனை ஆகிறது எனவும் கூறுகிறார். ரொட்டி விற்பனை மூலம் மட்டும் ஆயிரக்கணக்கில் வருமானம் வருகிறது. நாட்டில் ரொட்டி மீதான மோகம் அதிகரித்து வருவதால், மலேசியாவில் ரொட்டி தயாரிப்பாளர்களின் தேவையும் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் தான் ரொட்டி தயாரிக்கும் அகாடமியை திறக்க தான் யோசனை கூறியதாக தெரிவித்துள்ளார்.
ALSO READ | எகிப்தில் Netflix-ஐ தடை செய்ய வலுக்கும் கோரிக்கை, அரபு படத்தினால் கிளம்பிய சர்ச்சை..!!
ரொட்டி தயாரிக்க கற்றுக் கொண்டல், நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என கமருல் கூறுகிறார். மக்கள் சிறப்பாக ரொட்டி செய்ய கற்றுக்கொண்டால், மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்கிறார்.
கமருலின் கூறிய இந்த யோசனைக்கு, மக்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான எதிர்வினைகளை அளித்து வருகின்றனர். கமருலின் இந்த கருத்தை சிலர் விமர்சிக்கும் அதே வேளையில், சிலர் தற்போது சுற்றுலா மற்றும் உணவுத் துறை சிறந்த வகையில் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், வணிக வளர்ச்சியைத் தொடர இது ஒரு பயனுள்ள யோசனையாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
ALSO READ | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்!
ALSO READ | வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் கழிப்பறைக்கு ‘24 மணி’ நேர காவல்!
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR