நல்லா சாப்பிடணும், ஆனா எடையும் குறையணுமா? அதுக்கும் வழி இருக்கு...இப்படி பண்ணுங்க

Weight Loss Tips: நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், எப்போதும் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் சில ஆரோக்கியமான பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 9, 2023, 07:02 PM IST
  • எடை இழப்புக்கு காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிக அளவில் காணப்படுகின்றன.
  • சாலட்டாகவும் சைட் டிஷ் ஆகவும் இவற்றை உட்கொள்ளலாம்.
நல்லா சாப்பிடணும், ஆனா எடையும் குறையணுமா? அதுக்கும் வழி இருக்கு...இப்படி பண்ணுங்க title=

எடை இழப்புக்கான உணவுகள்: உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது? உணவில் எந்த விதமான மாற்றங்களை செய்வது? இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான உணவுமுறை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது பலருக்கு மிக கடினமாக இருக்கிறது. ஏனெனில் பலரால் உணவை கட்டுப்படுத்த முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது. 

நீங்களும் உணவுப் பிரியராக இருந்து, உடல் எடையைக் குறைக்க, உங்களால் டயட்டில் இருக்க முடியவில்லை என்றால், உங்களுக்கான சில உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம். 
 
எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள்

நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், எப்போதும் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் சில ஆரோக்கியமான பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். சில நேரம் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை பிறக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் நாம் உட்கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகள்தான் நம் உடல் எடை அதிகரிக்க காரணமாகின்றன. 

இந்த ஆசை வரும்போதும், குளிர்சாதனப்பெட்டியைத் திறக்கும்போது, ​​அதில் புதிய பழங்கள், காய்கறிகள் அல்லது பிற ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை உட்கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க உங்கள் ஃப்ரிட்ஜில் நீங்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய சில முக்கிய பொருட்களை பற்றி இங்கே காணலாம். 

மேலும் படிக்க | Immunity Foods: ஒரே கல்லில ரெண்டு மாங்கா! டைப் 2 நீரிழிவையும் சரி செய்யும் உணவுகள்

முட்டை

முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக பல ஆய்வுகள் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளன. முட்டை கொண்டு பல ஆரோக்கியமான தின்பண்டங்களையும் செய்யலாம். இதன் மூலம் ஆரோக்கியமான வழியில் வயிறு நிரம்பும்.
 
காய்கறிகள்

எடை இழப்புக்கு காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிக அளவில் காணப்படுகின்றன. சாலட்டாகவும் சைட் டிஷ் ஆகவும் இவற்றை உட்கொள்ளலாம்.
 
பருவகால பழங்கள்

நீங்கள் இனிப்புகளை சாப்பிட விரும்பினால், சாக்லேட் அல்லது இனிப்பு பதார்த்தங்களுக்கு பதிலாக, பருவகால பழங்களை சாப்பிடலாம். எடையைக் குறைப்பதில் பழங்கள் அற்புதமான விளைவைக் கொண்டிருப்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
உயர் புரத தின்பண்டங்கள்

புரதச்சத்து நிறைந்த உணவுகள் எடையைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகின்றன. காட்டேஜ் சீஸ், யோகர்ட் போன்றவற்றை உங்கள் குளிர்சாதன பெட்டியில் எப்போதும் வைத்திருங்கள். இவற்றால் சுவையும் சேரும், எடையும் விரைவில் குறையும்.
 
சாலட் 

பல்வேறு வகையான உயர்தர சாலட் சாப்பிடுவதால் நீங்கள் சுவையான உணவுடன் எடையை குறைக்கும் உணவையும் உட்கொண்ட திருப்தி உங்களுக்கு கிடைக்கும். சாலடுக்கு ஏற்ற காய்களை எப்போதும் ஃபிரிட்ஜில் வைத்திருப்பது மிக நல்லதாகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Turmeric Water: தினமும் மஞ்சள் கலந்த தண்ணீர், வெயிட் ஏறவே ஏறாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News