அர்ஜென்டினா துணை அதிபரை துப்பாக்கியால் சுட முயற்சி: நூழிலையில் தப்பினார்!

Cristina Fernandez: "இன்று இரவு நடந்தது மிகவும் தீவிரமான சம்பவம்" மற்றும் ஜனநாயகம் மற்றும் அதன் சட்டத்தின் ஆட்சிக்கு இது அச்சுறுத்தல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 2, 2022, 04:12 PM IST
  • ஜனநாயகம் மற்றும் அதன் சட்டத்தின் ஆட்சிக்கு இது அச்சுறுத்தல்.
  • பெர்னாண்டஸுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறு கோரிக்கை.
  • பெர்னாண்டஸ் 2007 முதல் 2015 வரை நாட்டின் அதிபராகவும் இருந்துள்ளார்.
அர்ஜென்டினா துணை அதிபரை துப்பாக்கியால் சுட முயற்சி: நூழிலையில் தப்பினார்! title=

அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டாஸ் கிர்ச்னரை கொல்ல முயற்சி நடந்ததாக அந்நாட்டு அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். ஒரு நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட வந்தாகவும், ஆனால் திடீரென துப்பாக்கி பழுதானதால் கிறிஸ்டினா உயிர் பிழைத்தார் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது வெளிப்படையான படுகொலை முயற்சி என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சியில், கிறிஸ்டினா பெர்னாண்டாஸ் கிர்ச்னர் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆதரவாளர்களிடம் பேசுவதற்கு தனது வாகனத்திலிருந்து இறங்குவதைக் காணலாம். ஆதரவாளர்களால் சூழப்பட்டு இருந்த நிலையில்,  அப்போது ஒரு நபர் திடீரென "துப்பாக்கி" போன்ற ஒன்றை எடுத்து அவரை நோக்கி சுடுவது போல தெரிகிறது. எனினும், துணை அதிபர் இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்தார். அந்த நபர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. ஆனால் சம்பவம் நடந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து, அந்த இடத்தில் இருந்த துணை அதிபரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அர்ஜென்டினா பாதுகாப்பு அமைச்சர் அனிபால் பெர்னாண்டஸ், 'சி5என்' செய்தி சேனலிடம், "ஆயுதத்தை வைத்திருந்த நபர் துணை ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்" என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இதுதொடர்பான மேலதிக விவரங்களை வெளியிட முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: வெறுப்பைத் தூண்டும் விதமாக பேசிய இமாம் நாட்டில் இருந்து வெளியேற்றம்: ஃபிரான்ஸ்

அர்ஜென்டினா நாட்டின் அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸின் அரசாங்கத்தின் அமைச்சர்கள், துணை ஜனாதிபதியின் "கொலை முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாக" ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டனர். அதில் "இன்று இரவு நடந்தது மிகவும் தீவிரமான சம்பவம்" மற்றும் ஜனநாயகம் மற்றும் அதன் சட்டத்தின் ஆட்சிக்கு இது அச்சுறுத்தல்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் மொரிசியோ மக்ரி, இந்த சம்பவம் "மிகவும் தீவிரமான" தாக்குதலாகும். இதுக்குறித்து உடனடி விசாரணையை நடனத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். அதிர்ஷ்டவசமாக துணை ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை" எனக் கூறியுள்ளார்.

பொதுப்பணித்துறையில் ஊழல் செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் பெர்னாண்டஸுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறு கடந்த வாரம் வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் அவரது வீட்டைச் சுற்றி தெருக்களில் கூடியிருந்தனர். துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் 2007 முதல் 2015 வரை நாட்டின் அதிபராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மகளின் கையால் தாயின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட கொடூரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News