என்னிடமும் அணுஆயுதங்களை இயக்கும் பட்டன் உள்ளது: ட்ரம்ப் பதிலடி!

என்னிடமும் அணுஆயுதங்களை இயக்குவதற்கான பொத்தான் உள்ளது; கிம்மிடம் யாராவது கூறுங்கள் என்றார் ட்ரம்ப். 

Last Updated : Jan 3, 2018, 04:00 PM IST
என்னிடமும் அணுஆயுதங்களை இயக்கும் பட்டன் உள்ளது: ட்ரம்ப் பதிலடி! title=

பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் பெரிய அளவிலான முயற்சிகளையும் ஏகப்பட்ட தியாகங்களையும் செய்துள்ளது என்று சீனா, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

புத்தாண்டை ஒட்டி தொலைக்காட்சியில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “ஒட்டுமொத்த அமெரிக்காவின் நிலப்பரப்பு நமது அணு ஆயுதத்தின் எல்லையில் உள்ளது. அதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில்தான் எப்போதும் உள்ளது” என கூறியிருந்தார்.

இந்நிலையில், கிம் ஜாங் உன்னுக்கு பதிலடி கொடுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ‘அணுகுண்டுக்கான ஸ்விட்ச் அவரது மேஜையில் எப்போதும் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார். அந்த பகுதியில் குறைபாடுகளுடன் பட்டினி கிடக்கும் யாராவது அவரிடம் கூறுங்கள், எங்களிடமும் அணுகுண்டு ஸ்விட்ச் உள்ளது. ஆனால், இது மிகப்பெரிதாக, வலிமையானதாக இருக்கும். முக்கியமாக எங்களது ஸ்விட்ச் செயல்படும் நிலையில் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் பெய்ஜிங்கில் கூறும்போது, “பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் பெரிய அளவில் முயற்சிகளையும், தியாகங்களையும் செய்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற காரணத்துக்காக பாகிஸ்தான் தனித்துவமான பங்களிப்பைச் செய்துள்ளது. சர்வதேச நாடுகள் இதனை அங்கீகரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சில மாதங்களாக இருவருக்கும் வார்த்தை மோதல்கள் இல்லாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டில் தொடக்கத்திலேயே வாய் தகராறு தொடங்கி விட்டது.

 

 

 

Trending News