இலங்கையின் தலைநகரம் கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள சாலாவ ராணுவ வெடி பொருள் கிடங்கில் சற்று முன் தீவிபத்து ஏற்படடு உள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.
தீவிபத்து காரணமாக ராணுவ முகாமில் சுற்றுப் புறத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முப்படையினரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதைப்பற்றி முழுவிவரம் இதுவரை தெரியவில்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த தீவிபத்தில் ஒரு ராணுவ வீரர் பலியாகி உள்ளதாகவும். பலர் காயம் அடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.