வட கொரியாவின் உயர்மட்ட தலைவர் கிம் ஜாங்-உன் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது, எனினும் 36 வயதான சர்வாதிகாரி இறந்துவிட்டார் என்று சீனா மற்றும் ஜப்பானில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதர வட்டாரங்கள் அவர் ஒரு கோமா நிலையில் படுக்கையில் இருப்பதாகவும், இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு புத்துயிர் பெறுவார் என்ற நம்பிக்கை இல்லை எனவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. வட கொரியாவின் தீவிர இரகசிய ஆட்சியின் தன்மை காரணமாக, கிம் ஜாங்-உன் மரணம் குறித்த கூற்றுக்கள் உத்தியோகபூர்வ அரசு அறிவிப்புக்கு முன்னர் சரிபார்க்க மிகவும் கடினமாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.
இந்த வார தொடக்கத்தில், இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து வட கொரிய தலைவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். கிம்மின் உடல்நலம் குறித்து ஆலோசனை வழங்க சீனா ஒரு குழுவை வட கொரியாவுக்கு அனுப்பியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கிம் உடல்நலம் குறித்த தகவல்கள் சர்ச்சைக்குரி விஷயங்களுடன் மறுப்புக்குள்ளாகிறது.
இதனிடையே HKSTV ஹாங்காங் சேட்டிலைட் தொலைக்காட்சியின் துணை இயக்குனர் ஷிஜியன் ஜிங்சோ, கிம் ஜாங்-உன் இறந்துவிட்டதாகவும் இதுதொடர்பாக ஒரு 'மிகவும் உறுதியான ஆதாரம்' தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜப்பானிய வார இதழான சுகன் கெண்டாய், வட கொரியாவின் சர்வாதிகாரி இதய அறுவை சிகிச்சையின் சிக்கல்களுக்குப் பிறகு ஒரு தாவர நிலையில்(vegetative state) இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பதிவில் குறிப்பிடுகையில்., "கிம் ஜாங்-உனுக்கு சிகிச்சையளிக்க அனுப்பப்பட்ட குழுவில் அங்கம் வகித்த சீன மருதுதவர் ஒருவர், ஒரு எளிய இதய நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் தலைவரை கடுமையாக நோய்வாய்ப்படுத்தியுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.