தாவூத் இப்ராஹிம் கண்டுபிடிப்பதில் பாகிஸ்தான் ஏன் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என பாகிஸ்தான் முன்னால் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்
கூறியுள்ளார்.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெரிஷி கூறி இருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் தலைவர் பர்வேஸ் முஷாரஃப், ராஜீவ் மெரிஷி கருத்துக்கு பதில் அளித்து பேசுகையில்,
தாவூத் இப்ராஹிம் விவகாரத்தில் இந்தியா நீண்ட காலமாக பாகிஸ்தானை குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனாலும் நாம் ஏன் நல்லது பண்ண வேண்டும் அல்லது அவர்களுக்கு உதவ வேண்டும்? எனக் கூறியுள்ளார். மேலும் 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்புகளில் முக்கிய குற்றவாளியான தாவூத் எங்கே என்று எனக்கு தெரியாது. பாகிஸ்தானில் தொடர்ந்து தாவூத் வசித்து வருகிறார் என இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக புது டில்லி இருந்து இஸ்லாமாபாத்திற்கு பல ஆவணங்களை அனுப்பியுள்ளது. பாகிஸ்தானில் தான் தாவூத் இப்ராஹிம் இருப்பதற்கான தெளிவான ஆதாரத்தை இந்தியா கொடுக்க வேண்டும். ஒருவேளை தாவூத் கராச்சியிலும் இருக்கலாம் அல்லது உலகில் வேறு எங்கும் இருக்கலாம் எனவும் கூறினார்.