போலந்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாஜி கப்பல் அம்பர் அறை புதையல் மர்மத்தை தீர்க்குமா?

இரண்டாம் உலகப் போரில் கலந்துக் கொண்ட கப்பலின் சிதிலங்களை கண்டுபிடித்துள்ளதாக போலந்து நாட்டின் டைவர்ஸ் கூறுகிறார்கள். இது, பல தசாப்தங்களாக மர்மமாக இருக்கும் ரகசியத்தின் திறவுகோலாக இருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக தென்படுகின்றன. ரஷ்யாவின் அரண்மனையிலிருந்த அலங்கரிக்கப்பட்ட அம்பர் அறை, நாஜிகளால் சூறையாடப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2020, 11:57 PM IST
போலந்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாஜி கப்பல் அம்பர் அறை புதையல் மர்மத்தை தீர்க்குமா?   title=

இரண்டாம் உலகப் போரில் கலந்துக் கொண்ட கப்பலின் சிதிலங்களை கண்டுபிடித்துள்ளதாக போலந்து நாட்டின் டைவர்ஸ் கூறுகிறார்கள். இது, பல தசாப்தங்களாக மர்மமாக இருக்கும் ரகசியத்தின் திறவுகோலாக இருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக தென்படுகின்றன. ரஷ்யாவின் அரண்மனையிலிருந்த அலங்கரிக்கப்பட்ட அம்பர் அறை, நாஜிகளால் சூறையாடப்பட்டது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள கேத்தரின் அரண்மனையில், அம்பர் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அம்பர் அறை மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், அது கடைசியாக Koenigsberg, ஜெர்மனியில் பால்டிக் துறைமுக நகரம், தற்போது ரஷ்யாவின் Kaliningradஇல் இருக்கிறது..

Koenigsbergஇல் இருந்து Karlsruhe என்ற நீராவி கப்பல் 1945 ஆம் ஆண்டில் பயணம் செய்தது, அப்போது போலந்தின் கடற்கரையில் போலந்து கடற்கரையில் சோவியத் போர் விமானங்களால் மூழ்கடிக்கப்பட்டது.  

Karlsruhe நீராவி கப்பலின் சிதைபாடுகளை கண்டதாக Baltictech குழுவைச் சேர்ந்த டைவர்ஸ் கூறுகின்றனர்.  

"பால்டிக் கடலின் அடிப்பகுதியில் மிகவும் சுவாரஸ்யமான, கண்டுபிடிக்கப்படாத கதை இருக்கக்கூடும் என்பதை நாங்கள் கடந்த ஆண்டு உணர்ந்தோம். அப்போதில் இருந்தே   நாங்கள் தேடுதல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறோம்" என்று Tomasz Stachura என்ற டைவர் தெரிவித்தார்.

“அதில் பல பொருட்கள் அப்படியே உள்ளன. ராணுவ வாகனங்கள், பீங்கான் மற்றும் இன்னும் பொருட்களைக் கொண்ட பல கிரேட்களை நாங்கள் கண்டுபிடித்தோம். ”

வரலாற்றில் மிகப் பெரிய கடல்வழி மீட்புப் பணிகளில் ஒன்றான Operation Hannibal என்ற  Karlsruhe கப்பல் பங்கெடுத்திருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயத்தில், East Prussiaவில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஜெர்மன் துருப்புக்களும் பொதுமக்களுக்கும் உதவியது இந்த மீட்புப் பணி.

Koenigsbergஇல் இருந்து பெரிய அளவிலான சரக்குகளையும், 1,083 பேரையும் அழைத்துக் கொண்டு கப்பல் அவசரமாக கிளம்பிச் சென்றதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

“இவை அனைத்தும் இணைந்து, கற்பனையைத் தூண்டுகிறது. பால்டிக் கடலின் அடிப்பகுதியில் ஜெர்மன் கப்பல் மற்றும் கிரேட்களைக் கண்டுபிடிப்பது முழு கதைக்கும் ஒரு  குறிப்பிடத்தக்க முடிவைக் கொடுக்கலாம்” என்று டைவர் டோமாஸ் ஸ்வாரா கூறுகிறார்.

அமெரிக்க  செய்தி | இந்தியாவுடன் பெரிய ஒப்பந்தம் செய்து சீனாவுக்கு மரண அடி கொடுக்கும் அமெரிக்கா...

Prussiaவில் உருவாக்கப்பட்ட அம்பர் அறை, 1716 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் கிரேட் ஜார் பீட்டருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியர்கள் அம்பர் அறையை பிரித்து, Koenigsberg-கிற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அந்த நகரத்தின் மீது நேச நாட்டுப் படைகளின் குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் போது காணாமல் போனது. அம்பர் அறை அழிக்கப்பட்டது என்று பலர் நம்புகிறார்கள். அம்பர் அறையைப் போன்ற ஒரு அறையை ரஷ்ய கலைஞர்கள் கேத்தரின் அரண்மனையில் கட்டியுள்ளனர்.

வரலாறு என்றுமே சுவாரசியமானது. அதிலும், அரிதான பரிசுகளும், பிரசித்தி பெற்ற பொருட்களும் மாயமானால், அதை சுற்றி பல கதைகளும் உலா வரும். அப்படி உலா வரும் கதைகளில் ஒன்றுக்கு உயிர் கிடைப்பது போலத் தோன்றினால், அது பேசுபொருளாகி, பழைய நினைவுகளையும், வரலாறையும் மீண்டும் நினைவுபடுத்தி பேச வைக்கும். நினைவுகளும் பொக்கிஷம் தானே? அம்பர் அறையைப் போல... 

கர்மவீரரை பற்றிய செய்தி இது | கல்விக்கண் திறந்த காமராஜர் கண் அயர்ந்த நாள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News