வாஷிங்டன்: டிசம்பர் 9-10 தேதிகளில் நடைபெறும் ஜனநாயகத்திற்கான மெய்நிகர் உச்சிமாநாட்டிற்கு (Virtual Summit for Democracy) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுமார் 110 நாடுகளை அழைத்துள்ளார். ஆனால் சீனா இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
செவ்வாயன்று அமெரிக்க (America) வெளியுறவுத்துறை வெளியிட்ட பட்டியலின்படி, தாய்வானும் இந்த உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேட்டோ உறுப்பினர் துருக்கியின் பெயரும் இந்த பட்டியலில் இல்லை.
செவ்வாய்கிழமை வெளிவிவகாரத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, இறுதிப் பட்டியலில் ரஷ்யாவும் சேர்க்கப்படவில்லை. தெற்காசிய பிராந்தியத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் விலக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈராக் தவிர அமெரிக்காவின் முக்கிய மேற்கத்திய நட்பு நாடுகளும் உள்ளன.
பைடன் நிர்வாகம் தைவானை அழைத்துள்ளது
செவ்வாயன்று வெளியிடப்பட்ட பங்கேற்பாளர்களின் பட்டியலின்படி, பைடென் நிர்வாகம் அடுத்த மாதம் நடக்கவுள்ள "ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டிற்கு" தைவானை அழைத்துள்ளது. ஜனநாயக ரீதியில் ஆளப்படும் இந்த தீவை தனது பிரதேசமாக கருதும் சீனாவுக்கு இந்த நடவடிக்கை கடும் கோபத்தை ஏற்படுத்தும்.
ALSO READ:பாகிஸ்தானை காப்பாற்ற நினைத்து நெருக்கடியில் மாட்டிக் கொண்ட துருக்கி
இந்த உச்சிமாநாடு இந்த வகையில் இது வரையிலான முதல் நிகழ்வாகும். சீனா மற்றும் ரஷ்யா தலைமையிலான சர்வாதிகார சக்திகளை எதிர்கொள்ள அமெரிக்காவை உலகளாவிய தலைமை பதவிக்கு கொண்டு வருவேன் என்று பிப்ரவரியில் ஆற்றிய தனது முதல் வெளியுறவுக் கொள்கை உரையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தது நினைவிருக்கலாம்.
இந்த மாத தொடக்கத்தில் பைடனுக்கும் சீன (China) அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையே நடந்த மெய்நிகர் சந்திப்பின் போது தைவான் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்தன.
தைவானில் (Taiwan) சுதந்திற்காக போராடுபவர்களும், அமெரிக்காவில் உள்ள அவர்களது ஆதரவாளர்களும் "நெருப்புடன் விளையாடுகிறார்கள்" என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாக ஜின்ஹுவா அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா இந்த உச்சி மாநாட்டிற்கு சுமார் 110 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள ஜனநாயகப் பின்னடைவு மற்றும் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் சீர்கேட்டை தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதை இந்த உச்சி மாநாடு குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
ஆசியாவில், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற சில அமெரிக்க நட்பு நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன. தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அழைக்கப்படவில்லை. மத்திய கிழக்கின் பிரதிநிதித்துவம் இதில் குறைவாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈராக் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளன.
ALSO READ:பைடன் - கமலா ஹாரீஸ் இடையே மோதல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR