Taiwan 7.5 Earthquake Updates: கிழக்கு தைவானின் இன்று (ஏப்ரல்3, புதன்கிழமை) காலை 7.4 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக தெற்கு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தைவானில் உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) அறிக்கையின் படி தைவானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் 34.8 கிமீ ஆழத்தில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது எனக் கூறியுள்ளது.
அதேபோல ஜப்பானின் வானிலை ஆய்வு மையம், "மியாகோஜிமா தீவு உட்பட பிராந்தியத்தில் உள்ள மற்ற ஜப்பானிய தீவுகளுக்கு மூன்று மீட்டர் (10 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவான் நிலநடுக்கத்தில் ஒருவர் பலி, 50 பேர் காயம்
தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐம்பது பேர் காயமடைந்து உள்ளதாக தைவான் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாக செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - Tsunmai 2024: ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள்..
பொது மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை -தைவான்
தைவான் நாட்டிலும் குறுஞ்செய்தி மூலம் பொது மக்களுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுக்கப்பட்டு உள்ளது. அதில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் அலைகளின் திடீர் எழுச்சியால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து கவனமாக இருக்கவும்" அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
AFP ஊடக செய்தியின் படி, இந்த நிலநடுக்கம் தைவான் முழுவதும் உணரப்பட்டது. தெற்கு பிங்டுங் கவுண்டியில் இருந்து தைபேயில் வடக்கு நோக்கி வலுவான நடுக்கம் இருந்ததாக மக்கள் கூறியதாக தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மெட்ரோ ரயில் நிறுத்தம்
தைபேயின் வானிலை ஏஜென்சியின் கூற்றுப்படி, "நிலநடுக்கம் காரணமாக தலைநகரில் சிறிது நேரம் மெட்ரோ இயங்குவதை நிறுத்தப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் மெட்ரோ தொடங்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல தீவில் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த மூன்று நாட்கள் நிலநடுக்கம் ஏற்படலாம்? எச்சரிக்கை
தைபேயின் மத்திய வானிலை நிர்வாகத்தின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் வூ சியென்-ஃபு கூறுகையில், "இந்த நிலநடுக்கம் தைவான் மற்றும் கடல் தீவுகள் முழுவதும் உணரப்பட்டது. 1999 ஆம் ஆண்டு நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 ஆண்டுகளில் இது மிகவும் வலுவானது" என்றும், அடுத்த மூன்று நாட்களில் 6.5 முதல் 7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்று அச்சம் இருப்பதாகவும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
செப்டம்பர் 1999 இல் தைவானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தைவான் தீவின் வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவு இதுவாகும். இதில் சுமார் 2,400 பேர் கொல்லப்பட்டனர்.
தைவான் ஏன் நிலநடுக்க பிரதேசமாக இருக்கிறது?
தைவான் தொடர்ந்து நிலநடுக்கங்களால் பாதிக்கப்படுகிறது, ஏனெனில் இந்த தீவு இரண்டு டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பிற்கு அருகில் உள்ளது. அதே நேரத்தில் அருகிலுள்ள ஜப்பான் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நில அதிர்வுகளை எதிர்கொள்கிறது.
தைவானின் மேற்குப் பகுதியில், பிலிப்பைன்ஸும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கரையோரப் பகுதிகளை வெளியேற்றுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்படும் ஜப்பான்
ஜப்பானின் மிகப்பெரிய நிலநடுக்கம் மார்ச் 2011 இல் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் 9.0-ரிக்டர் அளவிலான கடலுக்கு அடியில் ஏற்பட்டது. இது சுனாமியை ஏற்படுத்தியது. இதில் சுமார் 18,500 பேர் பலியாகினர் எனக் கூறப்படுகிறது.
2011 ஆம் ஆண்டும் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் மூன்று உலைகள் கடுமையாக சேதமடைந்தது. இது ஜப்பானில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தியது மற்றும் மிக மோசமான அணுசக்தி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தன்று ஜப்பான் ஒரு பெரிய நிலநடுக்கத்தைக் கண்டது. நோட்டோ தீபகற்பத்தில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது மற்றும் 230 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.
மேலும் படிக்க - சுனாமி வெள்ளம் பேரழிவு என உலகை உலுக்கிய மறக்கமுடியாத இயற்கைப் பேரழிவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ