'அதுக்கு கூட இப்ப பணம் இல்ல’: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அளித்த பகீர் தகவல்

Pakistan Economic Crisis: முன்னெப்போதும் இல்லாத மிக ஏழ்மையான நிலையில் தற்போது பாகிஸ்தான் உள்ளது. மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளுக்கு கூட அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2023, 02:40 PM IST
  • மக்களின் அத்தியாவசிய தேவைகளான கோதுமை மாவு, பருப்பு வகைகள் மற்றும் எரிபொருளின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
  • எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தான் தனது நாட்டில் பொதுத் தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
  • இந்த கேள்விக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் பதில் அளித்துள்ளார்.
'அதுக்கு கூட இப்ப பணம் இல்ல’: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அளித்த பகீர் தகவல் title=

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: பாகிஸ்தானில் இந்நாட்களில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத மிக ஏழ்மையான நிலையில் தற்போது பாகிஸ்தான் உள்ளது. மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளுக்கு கூட அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளான கோதுமை மாவு, பருப்பு வகைகள் மற்றும் எரிபொருளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தான் தனது நாட்டில் பொதுத் தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் பதில் அளித்துள்ளார்.

சர்வதேச செய்தியாளர்கள் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பதில் அளிக்கையில், ‘தேர்தல் நடத்துவதற்கு நிதி அமைச்சகத்திடம் எந்த நிதியும் இல்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பொருளாதார நெருக்கடியை நாங்கள் சந்தித்து வருகிறோம்’ என்றார்.

அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் பாகிஸ்தான் போராடி வருகிறது

‘வாஷிங்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய கடன் வழங்கும் நிறுவனத்திடமிருந்து, எங்களுக்கு தற்போது மிகவும் தேவையான 1.1 பில்லியன் டாலர் நிதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த தொகையை கடந்த ஆண்டே நாங்கள் பெற்றிருக்க வேண்டும்’ என்று அவர் கூறினார். ‘பலவீனமான உள்ளூர் நாணயத்துடன் நாங்கள் போராடி வருகிறோம், மேலும் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது.’ என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவியை அன்லாக் செய்ய, அதிகரித்த வரிகள், மானியங்களை உயர்த்துதல், அதிக எரிசக்தி விலைகள், ரூபாயின் மதிப்புக் குறைப்பு மற்றும் 25 ஆண்டுகளில் அதிக வட்டி விகித உயர்வு உள்ளிட்ட பல கொள்கை நடவடிக்கைகளை பாகிஸ்தான் செயல்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | தாலிபான் அமைச்சரவை கூட்டத்தில் சண்டை! அமைச்சரின் கையை உடைத்த தேர்வு வாரிய தலைவர்!

எரிபொருளுக்கு அரசாங்கம் பணம் வசூலிக்கும்

சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், எரிபொருளுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக பணம் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருந்தார். இதில் திரட்டப்படும் பணம் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்க பயன்படுத்தப்படும். அதே நேரத்தில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குறிவைத்து, அவர் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் கூறினார்.

பிடிஐ தலைவரான இம்ரான் கான் தனது பதவிக்காலத்தில் பிஎம்எல்-என் தலைவர்களை சிறையில் அடைத்ததற்கு குவாஜா குற்றம் சாட்டினார். தனது 3 ஆண்டு பதவிக்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தங்கள் கட்சித் தலைவர்களும் போலி வழக்குகளில் நீதிமன்றத்தை எதிர்கொண்டதாகவும் குவாஜா ஆசிப் கூறியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இலங்கையில் உணவு நெருக்கடி... இந்தியாவிடம் இருந்து 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News