வீடியோ: ஐ.எஸ். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும்: டிரம்ப் உறுதி!!

ஐ.எஸ். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து போரிடும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் கூறினார்.

Updated: Jan 31, 2018, 10:27 AM IST
வீடியோ: ஐ.எஸ். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும்: டிரம்ப் உறுதி!!
ANI

ஐ.எஸ். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து போரிடும் எனவும், மேலும் அவர், கட்சிகள் தங்களுக்கு இடையேயான வேற்றுமைகளை புறந்தள்ளி வைத்துவிட்டு மக்கள் சேவையாற்ற வேண்டும் என்றார். 

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் கடந்த வருடம் பொறுப்பேற்று கொண்டார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக உரையாற்றினார்.

அப்போது அவர், நம்முடைய வேற்றுமைகளை புறந்தள்ளி வைத்து விட்டு மக்கள் எதற்காக நம்மை தேர்வு செய்து இருக்கிறார்களோ அதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து போரிடும். பயங்கரவாதிகள் வெறும் குற்றவாளிகள் மட்டுமல்ல, சட்டவிரோத எதிரி போர் படையினர். 

சுதந்திரத்திற்காக தைரியமாக போராடும் ஈரான் மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும். வடகொரியாவை விட எந்த நாட்டின் அரசாங்கமும் மக்களை கொடூரமாக அடக்கி வைத்ததில்லை.

மக்களின் நன்மைக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும். அனைத்து மக்களுக்காக அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றிக் காட்டுவேன். 

தொடர்ந்து அவர், தேர்தலுக்கு பின்னர் 20 லட்சத்து 40 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்கி உள்ளோம். தயாரிப்பு துறையில் மட்டும் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.  பணியாளர்களின் ஊதியமும் உயர்ந்து உள்ளது என பேசினார்.