COVID-19 தடுப்பு மருந்து: இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டும் ரஷ்யா!!

COVID19 தடுப்பு மருந்தை தயாரிப்பதில், ரஷ்யா இந்தியாவுடன் கூட்டாண்மை வைத்துக்கொள்ள விரும்புகிறது என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (RDIF) தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2020, 03:40 PM IST
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நாடு COVID-19 க்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.
  • தடுப்பு மருந்து மிகவும் திறம்பட செயல்படுகிறது என்று புடின் கூறினார்.
  • ஆசியா, லத்தீன் அமேரிக்க, இத்தாலி மற்றும் உலகின் பிற பகுதிகளில் மருந்துக்கு மிக அதிகமான தேவை உள்ளது.
COVID-19 தடுப்பு மருந்து: இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டும் ரஷ்யா!! title=

புதுடெல்லி: COVID-19 தடுப்பு மருந்தை தயாரிப்பதில், ரஷ்யா இந்தியாவுடன் கூட்டாண்மை வைத்துக்கொள்ள விரும்புகிறது என்று ரஷ்ய (Russia) நேரடி முதலீட்டு நிதியத்தின் (RDIF) தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நாடு COVID-19 க்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்திருந்தார். இது 'மிகவும் திறம்பட' செயல்படுகிறது என்றும் நோய்க்கு எதிராக ஒரு 'நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை' உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். ஸ்புட்னிக் வி (Sputnik V), கமலேயா ஆராய்ச்சி தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் மற்றும் RDIF-ஆல் இணைந்து தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பு மருந்துக்கு இன்னும் பெரிய அளவு மருத்துவ பரிசோதனையான 3 ஆம் கட்ட பரிசோதனை செய்யப்படவில்லை.

ஆன்லைன் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய டிமிட்ரிவ், லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தடுப்பு மருந்தை (Vaccine) தயாரிப்பதில் பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன என்றார். "தடுப்பு மருந்தின் உற்பத்தி என்பது மிக முக்கியமான விஷயம். தற்போது, ​​நாங்கள் இந்தியாவுடன் ஒரு கூட்டாண்மையை எதிர்பார்க்கிறோம். இந்தியா கமலேயா தடுப்பு மருந்தை தயாரிக்கும் திறன் கொண்ட நாடு என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான அந்த கூட்டாண்மை, மருந்துகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது." என்று அவர் கூறினார்.

ALSO READ: உலகின் முதல் COVID-19 தடுப்பூசி: 40,000 பேர் மீது இறுதிக்கட்ட சோதனை செய்யும் ரஷ்யா

சர்வதேச ஒத்துழைப்பை ரஷ்யா எதிர்நோக்கியுள்ளது என்றார் டிமிட்ரிவ். "நாங்கள் ரஷ்யாவில் மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பிரேசில் மற்றும் இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளை செய்யப் போகிறோம். ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தடுப்பு மருந்தை தயாரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆசியா, லத்தீன் அமேரிக்க, இத்தாலி மற்றும் உலகின் பிற பகுதிகளில் மருந்துக்கு மிக அதிகமான தேவை உள்ளது.”என்றார்.

கமலேயா ஆராய்ச்சி தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தின் இயக்குநரும் ரஷ்ய அறிவியல் அகாடமியின் கல்வியாளருமான அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க், மனித அடினோ வைரஸ்கள் அல்லது மனித அடினோவைரல் வெக்டார்களை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு மருந்துகளின் மருத்துவ பரிசோதனைகளில் 20,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தார்.

"தடுப்பூசிகளில் நேரடி மனித அடினோ வைரஸ்கள் இல்லை. ஆனால், உடலில் பெருக்க முடியாத மற்றும் முற்றிலும் பாதுகாப்பான மனித வைரஸ்களான மனித அடினோவைரஸ் திசையன்கள் உள்ளன" என்று அவர் கூறினார்.

"தடுப்பூசியுடன் கமலேயா இன்ஸ்டிடியூட்டின் அணுகுமுறை, இரண்டு மனித அடினோவைரஸ் செரோடைப்களைப் பயன்படுத்துகிறது: எண் 5 (Ad5) மற்றும் எண் 26 (Ad26). மற்ற டெவலப்பர்கள் பயன்படுத்தும் ஒரு திசையன் அணுகுமுறையை விட இது தெளிவான நன்மையைக் கொண்டுள்ளது" என்று கின்ட்ஸ்பர்க் கூறினார்.

ALSO READ: உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்யும் ரஷ்யா…!!!

Trending News