பிரதமர் மோடி பதவியேற்ற முதல் இந்தியாவில் யோகாவிற்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சர்வதேச யோகா தினம் கொண்டாட ஐ.நா. சபைக்கு கோரிக்கை விடுத்து வந்தார். அந்த கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று சவுதி அரசு யோகாவை சிறந்த பயிற்சியாக ஏற்றுள்ளது. மேலும் அதை விளையாட்டின் ஒரு அங்கமாக அங்கீகரித்துள்ளது.
இதுதொடர்பாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுயது, சவுதி அரேபியாவில் யோகா ஒரு விளையாட்டு நடவடிக்கையாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சவுதி அரசிடம் இருந்து உரிமம் பெறப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகாவை மக்கள் ஆர்வமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.