கம்போடியாவில், சமூக ஆர்வளர்களாய் மாறிய பள்ளி மாணவர்கள்!

கம்போடியா பள்ளி மாணவர்களிடையே கழிவுநீர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது!

Last Updated : Feb 24, 2018, 07:49 PM IST
கம்போடியாவில், சமூக ஆர்வளர்களாய் மாறிய பள்ளி மாணவர்கள்! title=

கம்போடியா பள்ளி மாணவர்களிடையே கழிவுநீர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது!

தெருக்களில் தேங்கி நிர்கும் கழிவுநீர்களினால் ஏற்படும் தீமை மற்றும் அவற்றால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சணைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் ஒருங்கினைக்கப் பட்டு வருகிறது.

அதன்படி, புனோம் பெனால்ட் கேபிடல் நிர்வாகத்தின் பொதுப்பணி மற்றும் போக்குவரத்து துறை (DPWT), ஜப்பானில் உள்ள Kitakyushu நகரத்தின் அரசாங்கத்துடன் ஒன்றினைந்து சமூக விழிப்புணர்வு முகாமை ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்த முகாம் மூலம் மாணவர்கள், தண்ணீர் சூழல் மற்றும் கழிவுநீர் முக்கியத்துவம் பற்றி புரிந்து கொள்ளமுடியும் என ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 350 மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்று சாலையில் இருக்கும் கழிவுநீர் மற்றும் குப்பை சுத்தப்படுத்தினர்! 

Trending News