தென்சீன கடல்பகுதி: சீனா உரிமை கோர முடியாது

Last Updated : Jul 12, 2016, 05:15 PM IST
தென்சீன கடல்பகுதி: சீனா உரிமை கோர முடியாது title=

தெற்கு சீன கடல்பகுதியில் உள்ள வளங்களுக்கு சீனா வரலாற்று உரிமை கோர முடியாது என்று ஹேக் தீர்ப்பாயம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் பிலிப்பைன்ஸ் தொடர்ந்த இந்த வழக்கில், தங்களை எந்த உத்தரவும், தீர்ப்பும் பாதிக்காது, ஒன்றும் செய்ய முடியாது என்று தீர்ப்பாயத்தின் உத்தரவை, தீர்ப்பை சீனா புறக்கணித்துள்ளது. 

தி ஹேக் தீர்ப்பாய நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது:- “தெற்கு சீன கடல்பகுதியில் உள்ள வளங்களுக்கு சீனா வரலாற்று உரிமை கோர எந்த விதமான சட்ட அடிப்படைகளும் இல்லை” என்று கூறியுள்ளது. மேலும் 497 பக்க தீர்ப்பில், சீனாவுக்கு அப்பகுதியில் எந்த விதமான வரலாற்று ரீதியான உரிமை கோரலுக்கு சட்ட அடிப்படையில்லை என்று கூறியுள்ளது.

தெற்கு சீன கடல்பகுதியில் எரிசக்தி ஆற்றல், கனிவளங்கள், மீன்வள ஆதாரங்கள் உள்ளன. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அப்பகுதியில் வட்டமடித்து வருகின்றன. அமெரிக்கா தங்களுக்கு ஆதரவான நாடுகளுடன் கூட்டணி மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் சீனா அங்கு உருவாக்கியுள்ள செயற்கைத் தீவுகளுக்கு அருகில் அமெரிக்க டெஸ்ட்ராயர் போர்க்கப்பல்கள் ரோந்துப் பணி மேற்கொண்டது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Trending News