Sri Lanka Crisis: கொழும்பு ஜோடியின் கிஸ் போட்டோ வைரல், ரணகளத்தில் ஒரு குதூகலமா?

Sri Lanka Crisis: இலங்கையில் நடக்கும் போராட்டங்களை உலகமே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் வேளையில், போருக்கு மத்தியில் காதலின் பிரதிபலிப்பும் காணப்பட்டுள்ளது. ஒரு ஜோடி முத்தம் கொடுக்கும் படம் வைரல் ஆகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 14, 2022, 11:10 AM IST
  • இலங்கையில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது.
  • புதிய அரசை தேர்ந்தெடுக்க நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • இலங்கையில் போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு ஜோடி முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
Sri Lanka Crisis: கொழும்பு ஜோடியின் கிஸ் போட்டோ வைரல், ரணகளத்தில் ஒரு குதூகலமா? title=

இலங்கை நெருக்கடி: இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். இதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டார். இதனால் அங்கு அரசியல் நெருக்கடி மேலும் அதிகரித்தது. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிலைமை மோசமடைந்ததைக் கண்டு, இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், இந்த அசாதாரண சூழலில் ஒரு விசித்திரமான நிகழ்வும் அங்கு நடந்தது. இலங்கையில் போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு ஜோடி முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

படம் சமூக வலைதளங்களில் வைரலானது

இந்த படத்தை நியூஸ்வயர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இந்தப் படம் பகிரப்பட்டு, அதன் தலைப்பில், ‘கபள் கோல்ஸ்’ என்று எழுதப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தை கையகப்படுத்துவதற்கு வழிவகுத்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஒரு இந்த ஜோடியின் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 

மேலும் படிக்க | மாலத்தீவில் தஞ்சம் அடைந்த ராஜபக்சே சிங்கப்பூர் செல்கிறாரா?

புதிய அரசை தேர்ந்தெடுக்க நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், தற்காலிக அதிபரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தனவிடம் புதன்கிழமை கேட்டுக் கொண்டார். விக்கிரமசிங்க தனது அலுவலகத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டவுடன் புதிய அரசிடம் பொறுப்பை ஒப்படைப்போம் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்களும் கருத்து தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சே சிங்கப்பூர் செல்லக்கூடும்

அதிபர் கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்வதற்கு முன்னதாக விக்ரமசிங்க பதவி விலக வேண்டிய அழுத்தத்தில் உள்ளார். மாலத்தீவில் இருந்து ராஜபக்சே சிங்கப்பூர் செல்கிறார் என்று கூறப்படுகிறது. விக்கிரமசிங்கவின் அலுவலகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதிக்குள் நுழைய முயன்றனர். நாடாளுமன்ற சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக தெரிவிக்கப்பட்டது. 

போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

இந்த போராட்டங்களில் மூச்சு திணறல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலையில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குழுவில் அவரும் ஒருவர். இந்த சம்பவத்தில் மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | கொதி நிலையில் இலங்கை; தப்பி ஓடிய ராஜபக்ச; அடுத்த அதிபர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News