ஆப்கானிஸ்தானை (Afghanistan) தாலிபான் கைப்பற்றிய பிறகு, அங்கு வாழும் பொது மக்கள் , குறிப்பாக பெண்கள் பீதியில் உள்ளனர். அமெரிக்க படைகள் முழுமையாக விலகியுள்ள நிலையில், பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்களை வேலைக்கு போவதை அனுமதிக்காத தாலிபான் பயங்கரவாதிகள், ஆப்கானை சேர்ந்ய்த பெண் நீதிபதிகள், காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், மத்திய கோர் மாகாணத்தின் தலைநகரான பிரோஸ்கோ என்னும் பானு நெகர் என்பவர் தாலிபான்களால் (Taliban) படுகொலை கொல்லப்பட்டார். தாலிபான்கள் தங்களுக்கு அடிபணியாதவர்களை வீடு வீடாக தேடிச் சென்று கொன்று குவித்து வருகின்றனர். இதில் எட்டு மாத கர்ப்பிணியான பானு நெகார் பிரோஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் தாலிபான்கள் கொலை செய்தனர்.
துப்பாக்கி ஏந்திய மூன்று பேர் அவரை, அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கொலை செய்ததோடி, பின்னர் குடும்ப உறுப்பினர்களையும் கொன்றனர். வீட்டில் ரத்தம் சிதறிய சுவர்கள் மற்றும் அவரது சிதைந்த சடலத்தைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவின.
தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து தங்களை மிகவும் சகிப்புத்தன்மை மற்றும் மிதவாதிகள் பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வரும் நிலையில், தாலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹீத் இது குறித்து கூறுகையில் 'இந்த சம்பவத்திற்கும் தாலிபான்களுக்கும் சம்பந்தம் இருப்பதை நான் உறுதி படுத்தவில்லை. எங்கள் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது' என்றார்.
ALSO READ | Afghanistan: ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறும் தாலிபான்; காரணம் என்ன..!!
முன்னதாக, முந்தைய நிர்வாகத்தில் பணியாற்றிய மக்களுக்கு தலிபான் பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்தது. ஆனால், முந்தைய அரசின் பணியாற்றியவர்கள் மீது தொடர்ந்து தாலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த வார தொடக்கத்தில், ஆப்கானிஸ்தானின் சிறந்த பெண் காவலர் குலாப்ரோஸ் எப்டேகர் தாலிபான்களின் 'மிருகத்தனமான' தாக்குதலுக்கு உள்ளாகி, பின் தப்பி ஓடிவிட்டார்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தலிபான்கள் முதன்முதலில் நாட்டை கைப்பற்றியபோது, பெண்கள் மற்றும் சிறுமிகள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. பொது இடங்களில் புர்கா அணிவது கட்டாயமாக்கப்பட்டது, ஒரு ஆண் துணை இல்லாமல் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது போன்ற சட்ட திட்டங்கள் இருந்தன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR