கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு (Benjamin Netanyahu) சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. நெதன்யாகுவின் நம்பிக்கைக்குரிய ஒரு முன்னாள் உதவியாளர் திங்களன்று அவருக்கு எதிராக சாட்சியமளிக்க தயாராகியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் பெஞ்சமின் நெதன்யாகு சிக்கல் நிறைந்த காலமாக இருக்கலாம். நெதன்யாகு பிரதமராக இருந்த காலத்தில் மோசடி மற்றும் லஞ்சம் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
நெதன்யாகுவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சாட்சியாக ஆனார்
நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) முன்னாள் செய்தித் தொடர்பாளர் நியர் ஹெஃபெட்ஸ் இந்த விசாரணையில் முக்கிய அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். நெதன்யாகு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரது சாட்சியம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் முன்னாள் பிரதமர் நெதன்யாகு, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார். அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை ஆதாரமற்றவை என்றும் அவர் கூறியுள்ளார்.
ALSO READ | பகீர் தகவல்! 5000 பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர்..!!
2009-ல் இஸ்ரேல் (Israel) அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராக இணைந்த ஹெஃபெட்ஸ், 2014 ஆம் ஆண்டு நெதன்யாகுவின் குடும்பத்தின் செய்தித் தொடர்பாளராகவும் ஆலோசகராகவும் ஆனார். 2018ம் ஆண்டில், நெதன்யாகு சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் ஹெஃபெட்ஸ் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் அரசாங்க சாட்சியாக ஆனார். நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினருடனான உரையாடல்களின் பதிவுகளை புலனாய்வாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ALSO READ | கலிபோர்னியா சாலையில் திடீரென பெய்த ‘டாலர்’ மழை!
நெதன்யாகு திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார்
புதிய ஆதாரங்களை மறுபரிசீலனை செய்ய கால அவகாசம் வழங்குமாறு நெதன்யாகுவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை வலியுறுத்தியதால் அவரது சாட்சியம் கிட்டத்தட்ட ஒரு வாரம் தாமதமானது. நெதன்யாகுவின் மனைவி சாரா தனது கணவரின் பில்லியனர் நண்பர்களான ஹாலிவுட் தயாரிப்பாளர் அர்னான் மில்ச்சன் மற்றும் ஆஸ்திரேலிய பில்லியனர் ஜேம்ஸ் பேக்கர் ஆகியோரிடமிருந்து விலையுயர்ந்த பிரேஸ்லெட்டைப் பரிசாகப் பெற்றதாக கடந்த வாரம் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. திங்களன்று ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் நெதன்யாகு ஆஜரானார். அவருடன் லிக்குட் கட்சியின் மற்ற தலைவர்களும் வந்திருந்தனர்.
ALSO READ | ‘எல்லாமே அலர்ஜி என்றால் எப்படித் தான் வாழ்வது’; இளம் பெண்ணின் பரிதாப வாழ்க்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR